சோலார் பவரில் ஒரு சூப்பர் கார்

சோலார் பவரில் ஒரு சூப்பர் கார்

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

தங்கள் வாகனங்களை நிழலில் நிறுத்த, படாதபாடு படுபவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், வெயில் கண்ட இடம் சொர்க்கம் என்று வெட்டவெளியில் தனது மாருதி 800 காரை நிறுத்திவிட்டு நிம்மதியாக வலம் வருகிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த முருகன். ஆம், சூரிய மின் சக்தியிலேயே இயங்கும் வகையில் தனது காரை இவர் மாற்றியமைத்திருக்கிறார். தொழில்முறை ஆட்டோமொபைல் மெக்கானிக்கான இவர், எழுபது வயதை நெருங்கும் நிலையிலும் புத்தாக்கச் சிந்தனையுடன் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறார்.

என்.ஜி.ஓ காலனி பகுதியில் வசிக்கும் முருகனைச் சந்தித்துப் பேசினேன். “இந்தக் காரை சூரிய மின்சக்தி தகடுலயே இயங்கும் வகையில மாற்றியமைச்சு ரெண்டு வருசம் ஆச்சு. அதுக்கப்புறம் பெட்ரோல் பங்க் பக்கமே நான் போனதில்லை. என்னோட டிவிஎஸ் பிஃப்டிக்கும் பெட்ரோல் கிடையாது. பேட்டரியில்தான் ஓடுது” என்று உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார் முருகன்.

“எனக்குக் குமரி மாவட்டம் ஆற்றூர் சொந்த ஊர். அப்பா மாடசாமி, தங்கவேலை செய்துவந்தார். வீட்டுல மூணு ஆண், மூணு பெண்ணுன்னு மொத்தம் ஆறு பிள்ளைங்க. அப்பா ஒருத்தர் மட்டும் வேலைசெஞ்சு எட்டுப் பேர்  சாப்பிடும் நிலை. அதனால ஒன்பதாம் வகுப்போடு படிப்புக்கு முழுக்கு போட்டுட்டு, பைக் வொர்க் ஷாப்கள்ல வேலைக்குப் போய் மெக்கானிக் தொழிலைக் கத்துக்கிட்டேன்” என்று சொல்லும் முருகன், வழக்கமான மெக்கானிக்குகளைப் போலத்தான் வாழ்க்கையை நகர்த்திவந்தார். சோதனை முயற்சிகளை நோக்கி இவர் நகர்ந்ததே ‘சீனியர் சிட்டிசன்’ ஆன பின்புதான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in