எத்தினி பேர்டா இப்டி கெளம்பிருக்கீங்க!

எத்தினி பேர்டா இப்டி கெளம்பிருக்கீங்க!

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

மச்சான் வீட்டுக்கே ஓடி வந்துட்டாரு. அவரைப் பார்த்ததும் நான் ஒளியப் போனேன். பின்னாலேயே ஓடி வந்து கப்புனு அமுக்கிட்டாரு.
"என்னாச்சு... ரெண்டு மூணு நாளா போன ஸ்விட்ச் ஆஃப் பண்ணியே வெச்சிருக்கீங்க. இவகிட்ட கேட்டா, ‘அந்தக் கொடுமைய நீயே வந்து கேளு’ன்னு சொல்றா.. என்னதான் நடந்துச்சு?”ன்னு மச்சான் விசாரணைய போட்டாரு. அம்மிணியும் அவங்க பங்குக்கு “ஒரு அவசரம் ஆபத்துக்கு கூப்பிட முடியல. அப்டி என்னதான் பிரச்சினை?”ன்னு பொறுமித் தீத்துட்டாங்க.
எனக்கு கண்ணுல தண்ணியே வந்துருச்சு. நடந்ததை சொல்லிட்டேன்.

“நாளைக்கு ஒரு விசேஷம்பா. ஒரு இடத்துல மாலைக்குச் சொல்லிருந்தோம்... கடைசி நேரத்துல கை விரிச்சுட்டாங்க. உங்க ஊருல தான் பூக்கார தெருவே இருக்கே... ரெண்டு ரோஜா மாலையும் பத்து முழம் மல்லிப்பூவும் வாங்கிவைக்க முடியுமா?” இப்படி ஒரு நட்பு போன வாரம் எனக்கு போன்போட்டு கேட்டுச்சு.

இந்த நேரத்துல பூவுக்கு எங்கேன்னு போக... நாளைக்கு காலையிலதானே சந்தைன்னு நான் யோசிச்சிட்டு இருக்கும் போதே “உங்கிட்ட சொல்லிட்டா நடந்துரும்னு எனக்குத் தெரியும். தேங்க்ஸ்பா”ன்னு போனைக் கட் பண்ணிருச்சு அந்த மனுசன்.
“உங்கள நம்பித்தானே சொல்றாங்க... செஞ்சு குடுத்தா என்ன கொறைஞ்சா போயிருவீங்க”ன்னு வீட்டம்மிணியும் எசப்பாட்டுப் பாடுனாங்க. நீங்களும் அப்படித்தான் நெனப்பீங்க. ஆனா, நான் பட்டபாடு எனக்குத்தானே தெரியும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in