37 தொகுதிகள் மட்டுமே ஜெயிக்கலாம்! - ரஜினியை யோசிக்க வைத்த சர்வே ரிப்போர்ட்

37 தொகுதிகள் மட்டுமே ஜெயிக்கலாம்! - ரஜினியை யோசிக்க வைத்த சர்வே ரிப்போர்ட்

குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in

“இனியும் அதிமுக ஆட்சி தொடர்ந்தால் தமிழகத்தை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது” - 1996-ல் இப்படிப் பேசி ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளம் போட்ட ரஜினிகாந்த், “ஆட்சி மாற்றம்... இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை” என்று அதே கருத்தை இப்போது இன்னும் கொஞ்சம் நாகரிகமாகச் சொல்லி இருக்கிறார்.

ரஜினி என்றைக்கு அரசியல் வசனம் பேச ஆரம்பித்தாரோ அப்போதிருந்தே அவர் மீது விமர்சனங்கள் உண்டு. ஆனால், கடந்த காலங்களை எல்லாம் தாண்டி இப்போது அநியாயத்துக்கு வறுபட்டுக் கொண்டிருக்கிறார் ரஜினி. இதுநாள் வரை மற்றவர்கள் தான் அவரை கரித்துக் கொட்டினார்கள். இப்போது அவரது ரசிகர்களும் அவரை சந்தேகக் கண் கொண்டு பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். காரணம், தான் கட்ட நினைக்கும் அரசியல் கோட்டை குறித்து கடந்த சில தினங்களாக ரஜினி வெளியிட்டு வரும் கொள்கை முழக்கங்கள்.

‘கட்சிக்கு நான் தலைவனாக இருப்பேன்... ஆட்சிக்கு இன்னொரு நேர்மையான இளைஞரைத் தேர்வு செய்வேன். ஆட்சிக்குள் கட்சியின் குறுக்கீடு இருக்காது. தேர்தலுக்காக உருவாக்கப்படும் கட்சிப் பதவிகளில் தேர்தல் முடிந்ததும் தேவையானதை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றைக் கலைத்துவிட வேண்டும். 50 வயதுக்கும் குறைவானவர்களில் 65 சதவீதம் பேருக்கு தேர்தலில் சீட் கொடுப்பேன். மீதியை மாற்றுக் கட்சிகளில் இருந்து வரும் நல்ல மனிதர்களுக்கு ஒதுக்குவேன்’ - இப்படியெல்லாம் ரஜினி சொல்வதை மாற்று அரசியலை விரும்புகிறவர்கள் ஆச்சரியமாய்தான் பார்க்கிறார்கள். ஆனால், யதார்த்த அரசியலை பார்த்தவர்களோ, “இதெல்லாம் சரிப்பட்டு வருமா?” என்று நகைக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in