இசை வலம்: கேட்கத் திகட்டாத கே.வி.எம். இசை!

இசை வலம்: கேட்கத் திகட்டாத கே.வி.எம். இசை!

வா.ரவிக்குமார்
ravikumar.cv@hindutamil.co.in

பழைய திரைப்பாடல்களை இன்றைய இளம் கலைஞர்களைக் கொண்டு பாடவைத்து அமேசான் வழியாக வெளியிட்டுவருகிறது ‘சரேகாமா கார்வான்’. தமிழில் என்றென்றைக்கும் பொக்கிஷமாகக் கொண்டாடப்படும் பாடல்களை நாம் சற்றும் எதிர்பாராத, ஆவலைத் தூண்டும் புதிய பரிமாணத்துடன் கூடிய இசையையும் சேர்த்து அறிமுகப்படுத்துகின்றனர் இளம் தலைமுறை இசைக் கலைஞர்கள். அண்மையில், ஸ்பானிய மொழியில் ‘ஜெய் ஹோ’ பாடலை எழுதிப் பாடியதற்காக ‘கிராமி’ விருது பெற்ற தன்வீ ஷாவுடன் இணைந்து, ‘உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல’ பாடலை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் கிரீஷ் கோபாலகிருஷ்ணன்.

திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனின் இசையில், கவியரசு கண்ணதாசன் எழுதிய ‘உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல…’ (இதயக் கமலம்) பாடலைத் தேன் தடவிய குரலில் பாடியிருப்பார் பி.சுசீலா. காலத்தைக் கடந்த கானமாக இன்றும் பலரது நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கும் இந்தப் பாடலை தன்வீ ஷா பாடியிருக்கும் விதம் புதிய இசை அனுபவத்தைத் தருகிறது. இதுகுறித்து தன்வீ ஷாவிடம் பேசினோம்.

“நான் சுசீலா அம்மாவின் மிகப் பெரிய விசிறி. அவர் பாடிய இந்த அற்புதப் பாடலை நான் பாட வேண்டும் என்று கிரீஷ் கேட்டபோது, பயத்தோடுதான் சம்மதித்தேன். ரீ-மிக்ஸ் என்றாலே ஏதாவது ‘கிளப் ஃபீல்’ வந்துவிடுமோ எனும் எண்ணம்தான் என் பயத்துக்குக் காரணம். ஆனால், கிரீஷின் அணுகுமுறை முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. இந்தப் பாடலுக்கான இசையை லத்தீன் பாஸனோவா பாணி இசையில் வடிவமைத்திருந்தார். இந்தப் பாணி முழுக்க முழுக்க மெலடியாகத்தான் இருக்கும். அதுவே இந்தப் பாடலுக்கு முற்றிலும் புதிய சுவையைத் தருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in