மரித்த பின்பும் வாழும் அம்மா!- உருகச் செய்யும் உடல் தானம்

மரித்த பின்பும் வாழும் அம்மா!- உருகச் செய்யும் உடல் தானம்

கே.சோபியா
readers@kamadenu.in

கண் தானம், உடல் தானம் பற்றி கேள்விப்படும் போதெல்லாம், நாமும் அதைச் செய்ய வேண்டும் என்ற உந்துதல் பலருக்கும் ஏற்படும். பலர் உறுதிமொழிப் பத்திரத்தில்கூட கையெழுத்துப் போடுவார்கள். ஆனால், அவ்வாறு உறுதியளித்தவர்களில் பலர்  இறக்க நேரும்போது, உடல் தானம் செய்வதற்கான சூழல்கள் அவர்களது உறவினர்களுக்குப் பெரும்பாலும் அமைவதில்லை என்பதே கள யதார்த்தம். அப்படியே அமைந்தாலும் பெரும்பாலான உறவுகள் உடல் தானம் கொடுக்கச் சம்மதிப்பதில்லை.

மதுரையைச் சேர்ந்த ரமேஷுக்கும் அப்படியான நெருக்கடி வந்தது. அதை இவர் எதிர்கொண்ட விதம்தான் மற்றவர்களிடமிருந்து இவரை வித்தியாசப்படுத்துகிறது. தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறை ஊழியரான ரமேஷ், ‘உயிர்த்துளி’ எனும் ரத்த தான கிளப்பின் அமைப்பாளரும்கூட. 2004-ல், தனது தாயார் புஷ்பவதியின் பெயரை, அவரது ஒப்புதலுடன் உடல் தானத்திற்காகப் பதிவுசெய்ய வைத்திருந்தார் ரமேஷ்.

சமீபத்தில் புஷ்பவதி காலமானார். உடனே, மதுரை அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடர்புகொண்டார் ரமேஷ். "அப்படியா? அது குறித்த ஆவணம் எதுவும் இங்கே இல்லை. புதிதாகப் பதிவுசெய்து, உங்கள் உடன்பிறந்தவர்களின் ஒப்புதல் கடிதத்தையும் பெற்றுத்தந்தால், உடலைப் பெற்றுக்கொள்கிறோம்" என்றது மருத்துவமனை நிர்வாகம். தஞ்சையிலிருந்து வந்திருந்த தனது இரு தங்கைகளிடமும் இதுபற்றிப் பேசி அவர்களின் சம்மதத்தைப் பெற்றார் ரமேஷ்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in