ரசிகனைக் காக்கும் ரட்சகனார் சிம்பு!

ரசிகனைக் காக்கும் ரட்சகனார் சிம்பு!

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு, ‘ஹே ராம்’ படத்தை லேப்டாப்பில் சில நிமிடங்கள் பார்த்த களைப்பில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான் பாச்சா. சீறிவரும் காற்றை எதிர்த்து நெஞ்சை நிமிர்த்தி கமல் நிற்கும் காட்சி கனவில் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் கமலுக்குப் பதிலாக வேறொரு ஆள் அங்கு நின்றுகொண்டிருப்பதுபோல் இருந்தது. கமல் அளவுக்கு நீண்ட ஜடா முடியில்லாமல், நிர் -ஹேராயுத பாணியாக நின்றுகொண்டிருந்தவரை எங்கோ பார்த்தது போலவும் தோன்றியது. காற்றோடு காற்றாக பேனர் ஒன்று பெயர்த்துக்கொண்டு அந்த உருவத்தை நோக்கிப் பறந்துவர… பதறி உதறி விழித்துக்கொண்டான் பாச்சா.

ஆயுத பூஜை கொண்டாட்டத்தின் பலனாகக் குங்குமமும் சந்தனமுமாகக் குதூகலித்துக் கொண்டிருந்த பறக்கும் பைக்கைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, விண்ணை நோக்கி விருட்டென்று கிளப்பினான். பைக் சென்னை மற்றும் சென்னைக்கு மிக அருகில் உள்ள சகல பகுதிகளுக்கும் குறுக்கும் நெடுக்குமாகச் சென்றுகொண்டிருந்தது. மகாபலிபுரம் சாலையில் வைக்கப்பட்டிருந்த ஆளுயர பேனர்கள் அருகில் வாகன ஓட்டிகள் எவ்வித பயமுமின்றி இனிதே பயணித்துக்கொண்டிருந்தார்கள். “இது கவர்ன்மென்ட் பேனராக்கும். விழுந்தாலும் அடிபடும்ங்கிற கவலையே இல்லை” என்று விளம்பர பாணியில் கைகளை வீசிக்கொண்டே விரைந்து கொண்டிருந்தார்கள்.

இதையெல்லாம் கவனித்த பறக்கும் பைக், தானாகவே முன்னாள் அமைச்சர் பொன்னையன் வீட்டுக்கு முன் தரையிறங்கியது.
“வாய்யா பாச்சா. காத்துலேயே வர்ற… காத்துலேயே போற. பெட்ரோலுக்குப் பைசா செலவில்லை போலருக்கே?” என்று கண்ணைச் சுருக்கிச் சிரித்தபடி வரவேற்றார் பொன்னையன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in