ஐ.பெரியசாமிக்கு ஐடியா இல்லை! - சீண்டிப் பார்க்கும் செல்லூரார்

ஐ.பெரியசாமிக்கு ஐடியா இல்லை! - சீண்டிப் பார்க்கும் செல்லூரார்

சானா
readers@kamadenu.in

அன்று காலை பார்சல் டீ வாங்கச் சென்றிருந்த பறக்கும் பைக், தாழ்வாக, வேகமாகப் பறந்துவந்துகொண்டிருந்தபோது தெருவில் நின்றுகொண்டிருந்த மாடு, நாய் மீது லேசாக உரசிவிட்டது. அதில் ரசாபாசமாகி பின்னர் சமாதானமாகி ஒருவருக்கொருவர் அறிமுகப்படலம் முடிந்து, அறை வந்து சேர்ந்தபோது, பாச்சா ட்விட்டரில் மூழ்கியிருந்தான். திரும்பிப் பார்த்தவன், “உன்னை ஒரு டீ தானே வாங்கிட்டு வரச் சொன்னேன்…. அதுக்குள்ள ஏரியா அனிமல்ஸ் கூட ஒரண்டை இழுத்து ஃப்ரெண்ட்ஸாகி ஓவரா பாசமழை பொழிஞ்சிட்டு வந்திருக்க?!” என்று சிரித்தபடியே சீண்டினான்.

பார்த்தால் பைக்கின் ட்விட்டர் அக்கவுன்ட்டை டேக் செய்து ஏகப்பட்ட ட்வீட்களை இன்றைய சென்சேஷன்களான ‘ஒன்றிய உயிரினங்கள்’ ஷேர் செய்திருந்தன(ர்). அதில் டைனோசர் முதல் டாஸ்மேனியன் புலி வரை அழிந்துவிட்ட உயிரினங்களும் உயிர் பெற்று உலவுவதைக் காண முடிந்தது. சொல்லப்போனால், ‘ஆர்ட்டிஃபிஷியல் அனிமல்’ எனும் பெயரில் பறக்கும் பைக் ஒரு ட்விட்டர் பக்கம் வைத்திருப்பதை பாச்சாவே அப்போதுதான் அறிந்துகொண்டான். “எமகாதகன்டா நீ!” என்று பைக்குக்குப் பரிகாசச் சான்றிதழ் அளித்துவிட்டு கடமையைச் செய்யக் கிளம்பினான்.

முதலில் மதுரை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in