பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

தஞ்சாவூர்

மெயின் ரோட்டில் இருவர்...
“மளிகைக் கடை, காய்கறிக் கடை, ப்ளாட்பாரக் கடைன்னு எல்லாத்துக்கும் டைம் அறிவிச்சிருக்காங்க. ஆனா, நாம எப்ப வந்து வாங்கறதுன்னு கவர்மென்ட் சொல்லவே இல்லே பாரேன்...”
“அதை வேற தனியாச் சொல்லணுமாக்கும்!? நீங்கதான் லாக்டவுன் போட்டதிலிருந்து ஊரையே சுத்திச் சுத்தி வந்துக்கிட்டிருக்கீங்கன்னு கவர்மென்டுக்கு நல்லாத் தெரியுமே! எவ்ளோதான் கட்டுப்பாடு போட்டாலும் கனக்கச்சிதமா ஊரைச் சுத்துற ஆளுதானே நீங்கல்லாம். எப்படியும் தலையிலே துண்டைப் போட்டுக்கிட்டாவது வந்து வாங்கிடுவீங்கன்னு தெரிஞ்சுதான் கவர்மென்டே கம்னு இருக்கு போல!”
- தே.ராஜாசிங்ஜெயக்குமார், தஞ்சாவூர்

சீர்காழி

கடைவீதியில் இரு கரைவேட்டிகள்...
“இனிமே அதிமுக சசிகலா தலைமையில்தான் இயங்கும்னு கார்த்தி சிதம்பரம் சொல்லியிருக்காரு போல...”
“லாக்டவுன் சமயத்துல மக்கள் அப்செட்டா இருக்காங்க. இப்படி ஏதாவது காமெடி பண்ணி ரிலாக்ஸ் பண்ணணும்ல. லாட்டரி சீட் விற்பனையை மீண்டும் தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும்னு சொல்றதுலேயே தெரியலைங்களா... இவரு எவ்வளவு ஜாலியான ஆள்னு?”
“ஆமாமாம்.. காங்கிரஸ் கட்சியையே மோடிதான் மறைமுகமா வழி நடத்தறாரு. அது புரியாம அடுத்த கட்சி விவகாரத்துல இவரு மூக்கை நுழைக்கறாரு.”
- வி.வெங்கட், சீர்காழி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in