தைப் பொங்கலும் வந்தது... கல்லூரி மாணவிகளின் கலக்கல் பொங்கல்

தைப் பொங்கலும் வந்தது... கல்லூரி மாணவிகளின் கலக்கல் பொங்கல்

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

சாதி, மதம் எனப் பல்வேறு பிரிவினைகளைக் கடந்து, மொத்த தமிழர்களும் கொண்டாடும் வைபோகம் பொங்கல் பண்டிகை. துரித உணவுக் கலாச்சாரத்தில் நம்மைவிட்டு தூரமாகிப்போன பாரம்பரியக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் இன்றும் ஆணிவேராய்ப் பிணைந்திருப்பது பொங்கல் பண்டிகைதான்!

இன்றைய தலைமுறைக்கு, பாரம்பரிய அடையாளமான பொங்கல் வைக்கத் தெரிகிறதா எனப் பார்த்துவிட முடிவெடுத்தோம். ‘காமதேனு’ வாசகர்களுக்காக நாகர்கோவில் இந்து கல்லூரிக்குத் திடீர் விஜயம் செய்து தமிழ்த் துறை மாணவிகளிடம் பொங்கல் சவாலுக்கு அழைப்பு விடுத்தோம். “பொங்கல்தானே ஜமாய்ச்சிடுவோம். வாங்க…வாங்க” என கோதாவில் குதித்தனர் கல்லூரிக் கண்மணிகள். அதேசமயம், கல்லூரி வளாகத்தில் வேறொரு தேதியில் சமத்துவப் பொங்கலுக்குத் திட்டமிட்டிருப்பதாகவும், இப்போது 
பானையும் கரும்புமாகக் கூட்டம் கூடினால் பரபரப்பாகிவிடும் என்று சிலர் ரகசியத் தகவல் சொல்ல... இந்தத் திடீர் பொங்கல் கொண்
டாட்டத்தை எங்கு வைக்கலாம் என்று நெற்றியைச் சுருக்கியபடி யோசிக்க ஆரம்பித்தார்கள் மாணவிகள்.

அப்போது மாணவிகளில் ஒருவரே, “கல்லூரிக்கு எதிர்புறமே ஒரு இயற்கை உணவகம் இருக்கு. அங்கே போய் பாரம்
பரியப் பொங்கல் வைப்போம்” என ஐடியாவைத் தட்டிவிட அடுத்த சில நிமிடங்களில் அங்கே அனைவரும் ஆஜர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in