எல்லாருக்கும் அவங்க ராஜம்மா!- கல்வி வளர்த்த சிங்கப் பெண்

எல்லாருக்கும் அவங்க ராஜம்மா!- கல்வி வளர்த்த சிங்கப் பெண்

உ.சந்தானலெட்சுமி
santhanalakshmi.u@hindutamil.co.in

“தொலைநோக்கு கொண்ட கல்வியாளர், எங்கள் பத்மா சேஷாத்ரி பள்ளியின் சிங்கப் பெண். ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்களின் வாழ்க்கையை மாற்றியவர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” – ஒய்.ஜி.பி.ராஜலட்சுமியின் மறைவு குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்த இரங்கல் செய்தி இது. 

ஆம்! ரஹ்மான், அனிருத், கிரிக்கெட் வீரர் அஷ்வின் ரவிச்சந்திரன், என்று ஏராளமான திறமைசாலிகளை உருவாக்கித் தந்தவர் ஒய்.ஜி.ராஜலட்சுமி பார்த்தசாரதி. அவரது மறைவு பலரையும் கண்ணீரில் ஆழ்த்தியிருக்கிறது. கல்வியாளர் மட்டுமல்ல, பத்திரிகையாளர், நாடகக் கலைஞர் என்று பன்முகம் கொண்டவர் அவர்.

1925 நவம்பர் 8-ல், சென்னையில் ஆர்.பார்த்தசாரதி - அலமேலு அம்மையாரின் மகளாகப் பிறந்தவர் ராஜலட்சுமி. அவரது தந்தைவழி தாத்தாவான திவான் பகதூர் டி.ரங்காசாரி முன்னணி சுதந்திரப் போராட்ட வீரர். பாரம்பரியம் மிக்கக் குடும்பத்தில் பிறந்த ராஜலட்சுமி, இளம் வயதிலிருந்தே கல்வியில் நாட்டம் கொண்டிருந்தார். செயின்ட் ஜான் பள்ளியில் பயின்ற இவர், பின்னர் ஹோலி கிராஸ் கல்லூரியில் பயின்றார். 1947-ல், சென்னை பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதிலும் டிஸ்டிங்ஷனில் வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in