அஜித் ஒரு பக்கா ஜென்டில்மேன்- சிலிர்க்கும் ஷ்ரத்தா நாத்

அஜித் ஒரு பக்கா ஜென்டில்மேன்- சிலிர்க்கும் ஷ்ரத்தா நாத்

க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

நடைக்கேற்ப துள்ளும் சீரான கேசம், பத்து வினாடிகளுக்கு மேல் ஒரே இடத்தில் நிற்காத துறுதுறு பார்வை, கன்னக் குழி சிரிப்பு என்று கவனத்தை ஈர்க்கிறார் ஷ்ரத்தா நாத். இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ப்ரமோஷன் பணிகளுக்காகச் சென்னை வந்திருந்தவரை நேர்கொண்டு சந்தித்தேன். ஒவ்வொரு கேள்விக்கும் பூப்பந்து போல் வந்து விழுகின்றன பதில்கள்.

எப்படி இருந்தது ‘நேர்கொண்ட பார்வை' அனுபவம்?

என் சினிமா வாழ்க்கையில முக்கியமான படம் இது. போனி கபூர் மிகப் பெரிய சினிமா ஆளுமை. அவர் தயாரிக்கிற படத்துல நடிக்க வாய்ப்புக் கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம். அதுவும் அஜித்கூட நடிக்கப் போறேன்னு தெரிஞ்சதும் சந்தோஷம் டபுள் மடங்கு ஆகிடுச்சு. நடிச்சா அஜித்கூட நடிக்கணும்னு பல நடிகர், நடிகைகள் சொல்றது ஏன்னு இப்போதான் புரியுது, அஜித் மாதிரி ஒரு ஜென்டில்மேனைப் பார்க்குறது அபூர்வம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in