’டார்க்’ - கலக்கும் பயணத் தொடர்

’டார்க்’ - கலக்கும் பயணத் தொடர்

க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

நாம் வாழும் இந்த உலகம் தொடங்கியது எங்கே? சரியாகக் கேட்க வேண்டுமென்றால் எப்போது? கடந்த காலத்திலா, எதிர்காலத்திலா? அல்லது இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும் இந்த கணத்தில் உலகம் கட்டமைக்கப்பட்டுக் கொண்டுள்ளதா? ஆமாம் என்றால், இந்த கணத்தைக் கட்டமைத்தது கடந்த காலமா? சற்றுக் குழப்பமாக இருக்கிறதா? சற்று என்ன… சர்வமொத்தமும் குழப்பமாகவே இருக்கும். ஆனால், இது வெறும் தர்க்கமல்ல. அறிவியல் ரீதியான கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட விஷயம். இதுதான் இப்போது நெட்ஃபிளிக்ஸைக் கலக்கிக்கொண்டிருக்கும் ‘டார்க்’ தொடரின் மையம்.

2017 டிசம்பர் முதல் தேதி தொடங்கிய முதல் எபிசோடிலிருந்து ஜூன் 21-ல் வெளியாகியிருக்கும் 18-வது எபிசோடு வரை பார்வையாளர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் இந்தத் தொடர், அடிப்படையில் ஜெர்மன் மொழியில் தயாரிக்கப்படும் அறிவியல் புனைகதை த்ரில்லர். காலப் பயணம்தான் கதையின் ஆதார முடிச்சு. ஆங்கிலத்திலும் வெளியாகிவரும் இந்தத் தொடரின் முதலாவது சீஸன், நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இரண்டாவது சீஸனுக்கும் வரவேற்புத் தொடர்கிறது.

காலப் பயணம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in