சிறார்களின் ஓவியர்

சிறார்களின் ஓவியர்

ஜெ.சரவணன்
saravanan.j@kamadenu.in

பதினெட்டாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஓவியர்களில் ஒருவர் ஜான் ஜார்ஜ் பிரவுன். இவரது தனித்துவத்துக்குக் காரணம் சிறார் ஓவியங்களை அதிகம் வரைந்ததுதான்.

அமெரிக்க சிறார்களின் குழந்தைப் பருவத்தைத் தனது ஒவியங்களுக்கான முக்கியக் கருப்பொருளாக எடுத்துக்கொண்டார் ஜார்ஜ் பிரவுன். ஆரம்பத்தில் நடுத்தர வர்க்க குழந்தைகளை வரைந்தவர் பின்பு ஏழைக் குழந்தைகளையே அதிகம் ஓவியமாக வரைந்தார்.
நியூயார்க் நகர வீதிகளில் ஷூ பாலிஷ் போடும், பழம் விற்கும், பேப்பர் போடும் சிறார்கள் என அனைத்து விதமான சிறார்களையும் ஒவியமாக வரைந்திருக்கிறார்.

இவருடைய ஓவியங்களில் The Card Trick என்ற ஒவியத்தில் ஒரு கறுப்பினச் சிறுவன் சீட்டுகளை வைத்து மாயஜால வித்தை காட்டுகிறான். அதை மூன்று வெள்ளை இன சிறுவர்கள் வேடிக்கைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். அவர்களுக்குள் எந்தவித இன வேற்றுமையும் இல்லை. அவர்களுடைய சிரிப்பில் எந்தக் களங்கமும் இல்லை. வறுமையிலும் அவர்களிடம் சந்தோஷம் இருக்கிறது.
கீழே கிடக்கும் கறுப்பின சிறுவனின் தொப்பி, ஷூ பாலிஷ் போடும் பலகையில் கையை ஊன்றி வேடிக்கைப் பார்க்கும் சிறுவன், காலை மடித்து அமர்ந்திருக்கும் சிறுவனின் மூக்கு, சிறார்களின் உருவம், அவர்களது உடைகளில் உள்ள கிழிசல் என அத்தனையும் அழகாக தத்ரூபமாக வரையப்பட்டிருக்கிறது. முக்கியமாக சிறுவர்களின் சிரிப்பை இந்த ஓவியத்தில் பார்க்கும்போதே பார்க்கும் பார்வையாளனுக்குள் ஒரு மகிழ்ச்சியுணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in