பெருந்தொற்றுக் காலத்தில் உதித்த கேண்டி லேண்ட்!

பெருந்தொற்றுக் காலத்தில் உதித்த கேண்டி லேண்ட்!

எஸ்.சுஜாதா
sujatha.s@hindutamil.co.in

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் உலகமே வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தபோது, பெரும்பாலான குழந்தைகளின் மனநலனைக் காப்பாற்றியதில் ‘கேண்டி லேண்ட்’ விளையாட்டின் பங்கு முக்கியமானது. அழகான, வண்ணமயமான இந்த விளையாட்டும் 72 ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதிரி ஒரு பெருந்தொற்றுக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டது!

அது.. உலகத்தையே போலியோ அச்சுறுத்திக் கொண்டிருந்த காலம். திடீர் திடீரென்று வைரஸ் தாக்கும். தண்டுவடத்தைப் பாதிக்கும். கால்களின் இயக்கத்தைச் செயலிழக்கச் செய்துவிடும். 1940-ல் அமெரிக்காவின் சான் டியாகோ நகர் மருத்துவமனையில் போலியோவால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணும் அப்போது சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். அவரது கண் எதிரில் போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான வார்டு இருந்தது. போலியோ பற்றி முழுமையாக அறியாத காலகட்டம் அது. சுவாசக் கருவி அடங்கிய ஒரு பெரிய பெட்டிக்குள் வைத்துத்தான் குழந்தைகளுக்குச் சிகிச்சையளித்தார்கள். உடல் வேதனையைவிட, குழந்தைகளுக்குத் தனிமைதான் அதிக வேதனையை அளித்தது. தொற்று அச்சம் காரணமாக மருத்துவமனை ஊழியர்களைத் தவிர, வேறு யாரும் குழந்தைகள் அருகில் வரவோ அன்பாகப் பேசவோ மாட்டார்கள்.

இந்தக் காட்சிகளையெல்லாம் வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பெண் எலினோர் ஆர். அபாட். பள்ளி ஆசிரியையான இவர், போலியோவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்குக் குறிப்பாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களை உற்சாகமாக வைத்திருக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். அப்படித்தான், வீடுதிரும்பியதும் ‘கேண்டி லேண்ட்’ விளையாட்டை உருவாக்கினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in