சேராத இடம் சேர்ந்துவிட்டார் ரங்கசாமி!- நாராயணசாமி நறுக் பேட்டி

சேராத இடம் சேர்ந்துவிட்டார் ரங்கசாமி!- நாராயணசாமி நறுக் பேட்டி

கரு.முத்து
muthu.k@kamadenu.in

புதுச்சேரியில் காங்கிரஸின் தோல்வி குறித்து டெல்லியில் சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களிடம் விளக்கமளித்துவிட்டு வந்திருக்கும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மத்திய அரசுக்கெதிரான போராட்டங்கள், ரங்கசாமி ஆட்சியைக் கண்டித்து தினமொரு அறிக்கை என மீண்டும் புதுச்சேரி அரசியல் களத்தில் சுறுசுறுப்பாகி யிருக்கிறார். புதுச்சேரி நிலவரம், காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான காரணம் குறித்தெல்லாம் அவரிடம் பேசியதிலிருந்து...

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி எப்படி இருக்கிறது?

ஆட்சியா நடக்கிறது இங்கே? அமைச்சர்கள் பதவியேற்றுப் பல நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. யாருக்கு என்ன இலாகா என்று தெரியாமல் அவர்கள் திக்குத் தெரியாத காட்டில் இருக்கிறார்கள். 9,650 கோடி ரூபாயில் 2021-22 பட்ஜெட்டுக்கான கோப்பு டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. பொதுவாக இதுவரை உள்ள நடைமுறையின்படி எந்தெந்த இலாகாவுக்கு எவ்வளவு நிதி என்பன போன்றவற்றை அந்தந்த இலாகா அமைச்சர்களிடம் கலந்துபேசுவது வழக்கம். ஆனால், இம்முறை அப்படி எதுவும் நடக்கவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in