சைக்கிள் ரைடும்... மாஸ்க் கலரும்!

சைக்கிள் ரைடும்... மாஸ்க் கலரும்!

மக்கள் பரபரப்பாக வாக்களித்துக் கொண்டிருந்த சமயத்தில், நடிகர் விஜய் அதிரடியாக தனது வீட்டிலிருந்து சைக்கிளில் வாக்களிக்க வந்தது எல்லா பரபரப்பையும் பின்னுக்குத் தள்ளி பேசுபொருளானது. பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்யத்தான் அவர் சைக்கிளில் வந்தார் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு, அவர் சைக்கிள் ஓட்டிய வீடியோவை வைரலாக்கினர். அதுமட்டுமல்லாமல் பெரும்பாலான பதிவுகளில் ‘ஐடி ரெய்டா விட்ற... இந்தா வாத்தி ரெய்டு’ என்று கேப்ஷன் வேறு. வீட்டின் மிக அருகில் வாக்குச்சாவடி என்பதால் சைக்கிளில் வந்ததாக விஜய் தரப்பு சொன்னது. விஜய் ட்ரெண்டானால் அஜித் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? அஜித் அணிந்திருந்த மாஸ்க்கில் கருப்பு சிவப்பு கலர் இருக்கவே திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை உணர்த்தவே அவ்வாறு மாஸ்க் அணிந்தார் என்று கிளப்பி விட்டனர். இப்படியாக தேர்தல் பரபரப்பு, யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதையெல்லாம் தாண்டி இந்த இரண்டு நடிகர்களும் இணையத்தில் ட்ரெண்டானார்கள்.

இந்த வருடம் நல்ல ஆட்சி வரவேண்டும், தைரியமாக வாக்களியுங்கள். - ஜெயம் ரவி

இப்படி ஒருத்தர் மாத்தி ஒருத்தர் தொடர்ந்து அடிச்சா எடப்பாடி குரூப் தாங்குமா?- தமிழ் கிறுக்கு

இந்தத் தேர்தலில் அமமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும்! - டிடிவி தினகரன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in