இசைவலம்: பாடிக் குளிர்விக்கும் தீ!

இசைவலம்: பாடிக் குளிர்விக்கும் தீ!

வா.ரவிக்குமார்
ravikumar.cv@hindutamil.co.in

‘என்ஜாய் எஞ்சாமி’ - யூடியூபில் வெளியான இந்தப் பாடல், ஒரே வாரத்தில் 2 கோடி பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது. சுயாதீன இசைக் கலைஞர்களுக்கு உதவும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்படுத்தியிருக்கும் ‘மாஜ்ஜா’ தடத்தில் வெளிவந்திருக்கும் முதல் சுயாதீனப் பாடல் இது. முதல் பாடலே நோக்கத்துக்கு வலிமை சேர்க்கும் வகையிலும், நம்பிக்கை அளிக்கும் வகையிலும் சிறப்பாக அமைந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

பாடலில் வெளிப்படும் கருத்து, பாடலுக்கான காட்சியமைப்பு, தரமான ஒலி, ஒளிப்பதிவு இப்படி பல அம்சங்கள் மனதைக் கவர்கின்றன. இவை எல்லாவற்றையும் தாண்டி, வெள்ளந்தியான சொல்லாடலில் நம்மைக் கட்டிப்போடுகின்றன பாடகி தீயின் குரலும், எல்லா உயிரினங்களையும் சமமாக மதிக்கும் அவரின் சிநேகமும். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகள் இவர்.

கானா பாடல்கள் மூலம் புகழ்பெற்ற அறிவு இப்பாடலை எழுதி, தீயுடன் பாடியிருக்கிறார். இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் முதுகொடிய வேலை பார்த்த தமிழர்களின் வழித்தோன்றலான அறிவு, தன் முன்னோரின் வலி மிகுந்த வாழ்வை இந்தப் பாடலில் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார். இயக்குநர் பா.ரஞ்சித்தால் வளர்த்தெடுக்கப்பட்டவர் அறிவு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in