சமயம் வளர்த்த சான்றோர் 16: மாணிக்கவாசகர்

சமயம் வளர்த்த சான்றோர் 16: மாணிக்கவாசகர்

கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in

சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர் மாணிக்கவாசகர். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் மூவரும் தேவாரம் அருளிச் செய்தனர். மாணிக்கவாசகர் திருவாசகமும் திருக்கோவையாரும் அருளிச் செய்துள்ளார்.  

பாண்டிய நாட்டில் (மதுரை அருகேயுள்ள திருவாதவூரில்) சம்புபாத சரிதருக்கும் சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்த
வர் மாணிக்கவாசகர். இவர் திருவாதவூரார் என்றும் அழைக்கப்படுகிறார். ஒன்பதாம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தை சேர்ந்த மாணிக்கவாசகர், அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராக பணியாற்றினார், இரண்டாம் வரகுணனும் சிறந்த சிவபக்தராக விளங்கினார் (863 – 911).

அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டு வந்தார், தனது புலமையால் உயர்ந்த மாணிக்கவாசகருக்கு பல வரிசைகள் நல்கி‘தென்னவன் பிரம்மராயன்’ என்ற பட்டத்தையும் அளித்தார்.  உயர்ந்த செல்வம், பதவி, செல்வாக்கு அனைத்தும் இருந்த போதும், இது வாழ்க்கையில் இறுதி நோக்கம் அல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார், எந்நேரமும் ஈசன் குறித்த தியானத்திலேயே இருந்து அவரையே வழிபட்டு வந்தார். இவர் ஈசனை நினைத்து உருகிப் பாடிய திருவாசகம் தமிழில் சிறந்த இலக்கியங்கள் வரிசையில் வைத்து பெரிதும் போற்றப்படுகிறது. ஜியு போப் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in