எட்டுத் திக்கும் ‘கவனிப்பு’கள்!- கடைசி இரண்டு நாட்களில் நடந்தது என்ன?

எட்டுத் திக்கும் ‘கவனிப்பு’கள்!- கடைசி இரண்டு நாட்களில் நடந்தது என்ன?

காமதேனு நிருபர் குழு
readers@kamadenu.in

தேர்தல் களம் தினம் தினம் மாறக்கூடியது. கூட்டணி அறிவிப்பு, வேட்பாளர் அறிவிப்பு, பிரச்சாரம், பண விநியோகம், அதில் நடக்கும் குளறுபடிகள் எல்லாமே கள நிலவரத்தை மாற்றியமைக்கும் தன்மை கொண்டவை. தேர்தல் களத்தில் கடைசி 2 நாட்கள் நடந்தது என்ன?

கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கோவை மாவட்டத்தில் கமல்ஹாச புயலே இம்முறை மய்யம் கொண்டிருந்தது. அந்தப் புயலை வீழ்த்த பணப்புயலும் கரையைக் கடந்தது. வழக்கத்துக்கு மாறாக தேர்தலுக்கு 4 நாட்கள் முன்பே, பணம் விளையாட ஆரம்பித்துவிட்டது. கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கில் ஓட்டுக்கு 500 ரூபாய் வீதம் பாஜகவினர் முன்னிலையில் அதிமுகவினரே வழங்கினார்கள். அன்றிரவே கமல்ஹாசன், ‘‘எதிரணியினர் பணப்பட்டுவாடாவில் இறங்கி விட்டதாக செய்திகள் வருகிறது. அப்படி அவர்கள் தனக்குப் பணம் கொடுப்பதை வாக்காளர்கள் யாரேனும் என்னிடம் வந்து தெரிவிப்பீர்களேயானால் உங்கள் வீட்டிற்கு நான் காபி சாப்பிட வருகிறேன்!” என்று ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து பாஜக தரப்பில் கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in