கரோனா எதிர்கொள்ள தயாராய் இருக்கிறோமா?

கரோனா எதிர்கொள்ள தயாராய் இருக்கிறோமா?

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

கரோனா வைரஸால் சீனா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே பாதிப்பு அதிகம் என்று நாம் நினைத்துக்கொண்டிருந்த தருணத்தில், இந்தியாவுக்கும் அந்த ஆபத்து வந்து சேர்ந்திருக்கிறது. பிப்ரவரி தொடக்கத்தில், சீனாவின் வூஹான் நகருக்குச் சென்றுவந்த கேரள மருத்துவ மாணவிதான் இந்த வைரஸால் முதலில் பாதிக்கப்பட்டவர். ஆனால், அவர் உட்பட இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மூன்று பேரும் குணமடைந்துவிட்டதால் நிம்மதிப் பெருமூச்சு விட்ட இந்தியா, தற்போது மீண்டும் பதறத் தொடங்கியிருக்கிறது.
டெல்லி, ராஜஸ்தான், ஆக்ரா என்று கரோனா வைரஸால் முப்பதுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இத்தாலியிலிருந்து இந்தியா வந்த 16 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் டெல்லியில் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருக்கிறார்கள். வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவரும் இனி பரிசோதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. அனைத்து விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.

உலகம் முழுவதும் பாதிப்பு

2013-ல், எபோலா வைரஸ் தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 11,000-க்கும் மேற்பட்டோரை பலிவாங்கிய எபோலா, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில்தான் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், கரோனா இன்றைய தேதிக்கு எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. 95,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள், 3,200-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in