ஆடிப் பாடி வகுப்பெடுக்கும் அசத்தல் ஆசிரியை!- கலை வடிவில் ஒரு கற்பித்தல் முயற்சி

ஆடிப் பாடி வகுப்பெடுக்கும் அசத்தல் ஆசிரியை!- கலை வடிவில் ஒரு கற்பித்தல் முயற்சி

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

இசையோடு இயைந்த கல்வி, குழந்தைகளின் கற்றல் திறனை ஊற்றெடுக்கச் செய்யும் என்பதைப் பல்வேறு ஆய்வுகள் உறுதிசெய்கின்றன. இசை, நடனம் என்று கொண்டாட்டத்துடன் இயங்கும் பள்ளிகளுக்குக் குழந்தைகள் ஆர்வத்துடன் பாடம் கற்க வருவார்கள் என்பதும் நடைமுறை உண்மைதான். எல்லாப் பள்ளிகளிலும் இது சாத்தியமாவதில்லை என்றாலும், ஆர்வமுள்ள சில ஆசிரியர்கள் முன்னெடுக்கும் முயற்சிகள் அபாரமான பலன்களைத் தருவது கண்கூடு.

கோவை காரமடை அருகே உள்ள ஒன்னிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த சுகுணாதேவியும் அப்படிப்பட்ட ஆசிரியர்களுள் ஒருவர். “எங்க காலத்துல இப்படியொரு ஆசிரியை கிடைக்கலையே” என்று ஊர்க்காரர்களையும், பள்ளியின் பிற ஆசிரியர்களையும் ஏக்கத்துடன் சொல்ல வைத்திருக்கும் சுகுணாதேவியைச் சந்திக்கச் சென்றால், வகுப்பில் மாணவ - மாணவிகளுடன் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார்.

‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ எனும் பாரதியார் பாடலுக்கேற்ப ஒயிலாட்டம் ஆடுகிறார்கள் சுகுணாதேவியும் மாணவர்களும். தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களுக்கேற்ப கரகாட்டம், கோலாட்டம், பறையாட்டம், வேடர் ஆட்டம்... என்று களை கட்டுகிறது பள்ளி.
இப்படி ஒரு ஆர்வம் எப்படி வந்தது என்று கேட்டதும், மடைதிறந்த வெள்ளம் போல கடகடவெனப் பேசத் தொடங்குகிறார் சுகுணாதேவி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in