வள்ளுவருக்கு வந்த சோதனை!

வள்ளுவருக்கு வந்த சோதனை!

தொகுப்பு: தேவா

இப்போதெல்லாம் சிலைகள் என்றாலே பிரச்சினைதான். அம்பேத்கரில் ஆரம்பித்து, பெரியார் தொடர்ந்து இப்போது திருவள்ளுவரையும் விட்டுவைக்கவில்லை சர்ச்சை. திருவள்ளுவர் இந்துவா என்ற சர்ச்சை பெரும் குழப்பத்தைத் தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் படத்துக்கு பட்டை, குங்குமம் மற்றும் காவி உடை அணிவித்து ஒரு கூட்டம் குதூகலித்து வருகிறது. திருவள்ளுவர் சிலையை சாயம் பூசி அவமதிக்கும் வேலையும் நடந்திருக்கிறது. இதையடுத்து இணையத்தில், திருவள்ளுவர் குறித்த விவாதங்கள் அனல் பறக்கின்றன. இதை வைத்து ஏராளமான மீம்களும் கருத்துகளும் பதிவிடப்பட்டு வருகின்றன. வாழ்க்கைக்குத் தேவையான அற்புதமான கருத்துகள் கொண்ட திருக்குறள் கூட இந்த அளவுக்குப் பகிரப்பட்டிருக்காது. என்ன சோதனையோ?

மாற்றங்களை நம்மிடமிருந்து தொடங்க வேண்டும்! - கமல்ஹாசன் 
அப்படி பண்ணா ஏமாற்றம்தான் வரும் மேன்! - அன்பு மணி!
- செந்திலின்_கிறுக்கல்கள்

டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 
எந்த வருசம்னு சொல்லவே இல்லையே..?!- மாஸ்டர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in