ஆட்டோ ஓட்டும் டாக்டர் அஜித்!- உழைப்பால் உயர்ந்த மேதை

ஆட்டோ ஓட்டும் டாக்டர் அஜித்!- உழைப்பால் உயர்ந்த மேதை

என்.பாரதி
readers@kamadenu.in

கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள அஞ்செல் பெட்டி பகுதியின் ஆட்டோ ஸ்டாண்டில் சவாரிக்காகக் காத்திருக்கும் அஜித், சத்தமில்லாமல் ஒரு சாதனையைச் செய்திருக்கிறார். ஆம், மலப்புரத்தில் உள்ள துஞ்சத்து எழுத்தச்சன் மலையாளப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் இவர். அதுமட்டுமல்ல... 2013-ல் ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தில் முதன் முதலாக முனைவர் பட்டம் பெற்றவரும் இவர்தான். வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களைக் கல்வியின் கரம் பிடித்துக் கடந்துவந்த அஜித்தைக் காமதேனுவுக்காகச் சந்தித்தேன்.

சவால்கள் நிறைந்த தன் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

“நான் பிறந்து மூணு மாசத்திலேயே என்னோட அம்மா சாந்தாவை அப்பா விவாகரத்து பண்ணிட்டார். வீட்டுல அம்மா, நான், என்னோட பாட்டின்னு மொத்தம் மூணு பேருதான். அம்மாவுக்கு அப்போ ரொம்பச் சின்ன வயசுங்குறதால சொந்தக்காரங்க எல்லாரும் அம்மாவை இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொன்னாங்க. ஆனா, என்னோட எதிர்காலத்தை மட்டுமே தனக்கான வாழ்க்கையா நினைச்சாங்க அம்மா. எனக்காகவே இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in