வம்பு பிடிக்கும் ட்ரம்ப்!- என்னாகும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம்?

வம்பு பிடிக்கும் ட்ரம்ப்!- என்னாகும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம்?

சந்தனார்
readers@kamadenu.in

“உலகின் மிகப் பெரிய எரிசக்தி நாடான அமெரிக்கா மீது நடத்தப்பட்ட போர் முடிவுக்கு வந்திருக்கிறது. அழகான, தூய்மையான நமது நிலக்கரி மீதான போரை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டோம். அதீத செலவு பிடிக்கின்ற, பாரபட்சமான, கொடூரமான பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து வெற்றிகரமாக வெளிவந்து விட்டோம்” – பாரிஸ் பருவநிலை மாநாட்டிலிருந்து அதிகாரபூர்வமாக வெளியேறியிருக்கும் அமெரிக்காவின் நடவடிக்கையை, தனக்கே உரிய ஆர்ப்பாட்டமான மொழியில் அறிவித்த ட்ரம்பின் வார்த்தைகள் இவை.

2016-ல், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஒபாமா அரசு கையெழுத்திட்டிருந்த நிலையில், அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ஐநாவிடம் தற்போது அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது ட்ரம்ப் அரசு. இதன் மூலம், பருவநிலை மாறுதல் மூலம் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து உலகைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சி பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. விலகல் தொடர்பாக ட்விட்டரில் அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, “தாங்க முடியாத சுமைகளை அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீது சுமத்தும் வகையில் பாரிஸ் ஒப்பந்தம் இருந்தது” என்பதை மறக்காமல் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக, பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து முற்றிலும் விலகுவதற்கான நடவடிக்கைகள் முறைப்படி நடைபெறும். 2020 நவம்பர் 4-ல், அமெரிக்கா இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியிருக்கும். துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் 2020 நவம்பர் 3-ம் தேதிக்கு மறுநாள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in