எங்க குலசாமி 8 - இந்த வாரம்: சி.பி.ராதாகிருஷ்ணன்

எங்க குலசாமி 8 - இந்த வாரம்:  சி.பி.ராதாகிருஷ்ணன்

கா.சு.வேலாயுதன்

சின்னமுத்தூர் செல்வக்குமாரசுவாமி

பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும் முன்னாள் எம்பி-யுமான சி.பி.ராதாகிருஷ்ணன் திருப்பூரில் வசிக்கிறார். அகில இந்திய கயிறு வாரியத் தலைவர் பதவியிலிருந்து அண்மையில் விடைபெற்ற இவர், மக்களவைத் தேர்தலில் களமிறங்குவதற்காக கட்சிப் பணிகளில் தீவிரமாய் இருக்கிறார். அவரிடம், “உங்க குலசாமியை கும்பிட்டு வர போலாமா?” எனக் கேட்டேன். சற்றே யோசித்தவர், “நாளைக்கு அதிகாலையில நம்ம வீட்டுக்கு வந்திருங்களேன். போயிடலாம்” என்றார்.

மறுநாள் காலை 6 மணிக்கு அவரது வீட்டில் இருந்தேன். அதற்கு முன்பாகவே அவர் ரெடியாக காத்திருந்தார். “கொங்கு வேளாள கவுண்டர்களில் மணியன்குலம் எங்களுடையது. மூதாதைக திசைக்கொருத்தரா போய் வேளாண் தொழிலில் ஈடுபட்டதால அவங்கவங்க வசிப்பிடத்துக்கு ஏற்ப முத்தூர் மணியன், மோகனூர் மணியன்னு பேரு வழங்கலாச்சு. எங்களுக்கு முத்தூர் பக்கத்துல உள்ள சந்திராபுரம்தான் பூர்வீகம். அங்கே எங்க குலத்துக்காரங்களுக்கு சின்னமுத்தூர் செல்வகுமாரசாமிதான் குலதெய்வம். நாங்க குலசாமி கும்பிடுறதுக்கு முன்னாடி அங்க இருக்கிற செல்லாண்டியம்மனைக் கும்பிட்டுட்டுத்தான் குலசாமி கோயிலுக்குள்ள அடியெடுத்து வைப்போம். இந்தக் கோயிலுக்குப் பக்கத்துலயே மூதாதைகள் சமாதிகளான குகைக்கோயில்களும் இருக்கு. அவங்க வழிபாடு முடிச்சுட்டு, அதற்கடுத்து உள்ள அத்தனூரம்மன், அந்த அம்மனுக்குக் காவலா இருக்கிற குப்பயணசுவாமி, சின்னக்குப்பயணசாமி எல்லாத்தையும் வரிசையா வழிபடுவோம்” என்ற ராதாகிருஷ்ணன், மேஜையில் இருந்த குலசாமி படத்தை தொட்டுக்கும்பிட்டுவிட்டு காரில் ஏறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in