காணிகளுக்குப் பிடித்த ஏறுமாடவாசம்!

காணிகளுக்குப் பிடித்த ஏறுமாடவாசம்!

என்.சுவாமிநாதன்

அந்த வீட்டுக்குச் சென்ற கணத்தில் ஆச்சரியப்பட்டு போனேன். வீட்டில் ஊஞ்சல் கட்டியும், குளு, குளு ஏ.சி அறைகளிலும் ஓய்வெடுப்பவர்களைப் பார்த்திருப்போம். வீட்டுக்குப் பின்னால் மரத்தில் கூடுகட்டி வசிப்பவர்களைப் பார்த்திருக்கிறோமோ? சுரேஷ் சுவாமியார் காணி அப்படித்தான் கூடுகட்டி வசிக்கும் பறவையைப் போல குதூகலமாக வசித்துக் கொண்டிருக்கிறார்!

காணி இன மக்களில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மனிதர் இவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணையின் மறுகரையில் மலைப்பகுதியில் ஏராளமான காணிக் குடியிருப்புகள் உள்ளன. அங்கிருந்தால் பிள்ளைகளின் கல்விக்கு சமவெளிக்கு அழைத்து வரவே தொலைதூரம் செல்ல வேண்டும் என்பதால் சமவெளிப்பகுதியான தடிக்காரன்கோணம் என்னும் கிராமத்தில் வீடு வாங்கி குடியேறிவிட்டார் சுரேஷ் சுவாமியார் காணி. இவரது மூத்தமகள் இவாஞ்சிலின் ரேஸ்மா பல் மருத்துவர். இளைய மகள் இவாஞ்சிலின் நிஸ்மா இறுதியாண்டு சட்டமாணவி. காணி சமூகத்தவரில் முதல்முதலாக மருத்துவம், சட்டம் பயிலும் பிள்ளைகள் இவர்கள்தான்.

நாம் வந்திருப்பது அறிந்து தனது மரக்கூட்டில் இருந்து இறங்கிவந்து வரவேற்கிறார் சுரேஷ் சுவாமியார்காணி. “இதோட பேரு ‘ஏறு மாடம்’ என்றவாறே தனது கூட்டைப்பற்றி பேசத் துவங்கினார். “கூவைகாடுமலை தான் நான் பிறந்தஊர். இதுக்கு திருவள்ளுவன் மலைன்னும் பேரு. இங்க வள்ளுவன் கல்பொற்றை, வள்ளுவத்தி பொற்றைன்னு இரண்டு சின்ன மலைக்குன்றும் இருக்கு. திருவள்ளுவர், அவரோட மனைவியோட வந்து வருசத்துக்கு ஒருநாளு இங்கே தங்கி இருந்து, தேனும், திணைமாவும் சாப்பிட்டுப் போறதா காணி வம்சாவழியில் வாய்மொழி பாட்டு உண்டு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in