இசைவலம்: சிலிர்க்கவைக்கும் சிம்பிள் கிஃப்ட்ஸ்

இசைவலம்: சிலிர்க்கவைக்கும் சிம்பிள் கிஃப்ட்ஸ்

வா.ரவிக்குமார்
ravikumar.cv@hindutamil.co.in

மனித இனத்தின் ஒற்றுமையைப் பேணவும், கரோனாவுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இசையால் உலகத்தை இணைக்கும் ‘சிம்பிள் கிஃப்ட்ஸ்’ எனும் இசைப் பரிசை உலக மக்களுக்கு வழங்கியிருக்கிறது ஐநா.

இதில் இந்தியாவின் சார்பில் பங்கெடுத்திருக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த கர்னாடக இசைப் பாடகி ரஞ்சனி சிவக்குமார். அவரிடம் இதுகுறித்துப் பேசினோம்.

“ஐநா சபை வழங்கும் இந்த ‘சிம்பிள் கிஃப்ட்ஸ்’ மிகவும் சிறப்பான பரிசு. 54 நாடுகளைச் சேர்ந்த வாத்திய இசைக் கலைஞர்கள், பாடகர்களின் பங்களிப்பில் இந்த இசைக் கதம்பம் மலர்ந்திருக்கிறது. இதில் இந்தியாவின் பிரதிநிதியாகப் பங்கேற்றதில் மகிழ்ச்சி.
இதில் ஒவ்வொரு கலைஞருக்கும் உரிய இசைக் கோப்புகள் அளிக்கப்படும். அவர்கள் அதைப் பாடி அல்லது இசைத்து அனுப்ப வேண்டும். இப்படி 54 இசைக் கலைஞர்களின் பங்களிப்பையும் ஒன்றிணைத்து 5 நிமிடம் 40 நொடிகள் கொண்ட இந்த முழு வடிவ இசைக் கதம்பத்தைக் கம்போஸ் செய்திருக்கிறார் மைக்கேல் ஹிக்கின்ஸ்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in