ஹாட் லீக்ஸ்- ஒவைசியை சாமாதானம் செய்ய சீனியர் எம்பி!

ஹாட் லீக்ஸ்- ஒவைசியை சாமாதானம் செய்ய சீனியர் எம்பி!

ஆளுநர் ஆட்சிக்கு ஆசைப்படும் பாஜக!

எப்படியாவது அதிமுகவை தாங்கள் இழுத்த இழுப்புக்கு வரவைத்து கூட்டணி ஏற்படுத்தி தேர்தலைச் சந்திக்க நினைக்கிறது பாஜக தலைமை. ஆனால், இப்படியே தேர்தலை நடத்தினால் திமுகவுக்குத்தான் வாய்ப்பு அதிகம். அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும் நமக்குத்தான் பெருத்த அடி விழும். எனவே, ஏதாவது காரணத்தைச் சொல்லி அல்லது அதற்கான சூழலை ஏற்படுத்தி ஆறு மாதகாலத்துக்கு தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்துங்கள். அந்த ஆறு மாத காலத்தில் தமிழகத்தை நம் வசப்படுத்திக் கொண்டு அதன் பிறகு ஏற்படும் அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கலாம். இப்படியொரு வாய்ப்பு அமைந்தால் ஒதுங்கி இருக்கும் ரஜினியையும் அரசியலுக்குள் வரவைத்துவிடலாம்” என பாஜகவின் கீழ்மட்ட நிர்வாகிகள் வலியுறுத்துகிறார்களாம். பொங்கலுக்கு தமிழகம் வரும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் காதுக்கும் இந்த விஷத்தைக் கொண்டு செல்வதாக இருக்கிறார்களாம் மாநில பாஜக பொறுப்பாளர்கள்.

இடம் தரமறுத்த காங்கிரஸ்

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் சென்னையில் ஜனவரி 6-ம் தேதி ஒருநாள் காத்திருப்புப் போராட்டம் நடத்தினார்கள். முதலில் இது ஐந்து நாள் போராட்டமாக திட்டமிடப்பட்டதால் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடத்த அனுமதி மறுத்துவிட்டது போலீஸ். அதனால் காங்கிரஸ் அறக்கட்டளைக்குச் சொந்தமான காமராஜர் அரங்கத்தின் முகப்பைக் கேட்டதாம் போராட்டக் குழு. ஆனால், “டெல்லியிலிருந்து அனுமதி கிடைக்க வில்லை” என்று சொல்லி கைவிரித்து விட்டதாம் தமிழக காங்கிரஸ். இதனால் அப்செட்டான போராட்டக் குழுவினர், “ஒரு வகையில் பார்த்தால் பாஜக அரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை காங்கிரஸ் தான் முன்னெடுத்து நடத்த வேண்டும். ஆனால், அப்படியும் முன்வராதவர்கள் போராட்டம் நடத்த இடத்தைக்கூட கொடுக்க மறுக்கிறார்களே” என்று நொந்து போனார்களாம். அதேசமயம், “போராட்டத்தில் கலந்துகொள்ளும் விவசாயிகளுக்கு உணவு ஏற்பாடு பண்ண முடியுமா?” என்று வைகோவிடம் கேட்டார்களாம். உடனே, தனக்குத் தெரிந்த தொழிலதிபர் ஒருவரிடம் சொல்லி மூன்று வேளைக்கான ஒரு நாள் உணவுக்கு ஓகே வாங்கிக் கொடுத்தாராம் வைகோ.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in