ஆளுநர் ஆட்சிக்கு ஆசைப்படும் பாஜக!
எப்படியாவது அதிமுகவை தாங்கள் இழுத்த இழுப்புக்கு வரவைத்து கூட்டணி ஏற்படுத்தி தேர்தலைச் சந்திக்க நினைக்கிறது பாஜக தலைமை. ஆனால், இப்படியே தேர்தலை நடத்தினால் திமுகவுக்குத்தான் வாய்ப்பு அதிகம். அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும் நமக்குத்தான் பெருத்த அடி விழும். எனவே, ஏதாவது காரணத்தைச் சொல்லி அல்லது அதற்கான சூழலை ஏற்படுத்தி ஆறு மாதகாலத்துக்கு தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்துங்கள். அந்த ஆறு மாத காலத்தில் தமிழகத்தை நம் வசப்படுத்திக் கொண்டு அதன் பிறகு ஏற்படும் அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கலாம். இப்படியொரு வாய்ப்பு அமைந்தால் ஒதுங்கி இருக்கும் ரஜினியையும் அரசியலுக்குள் வரவைத்துவிடலாம்” என பாஜகவின் கீழ்மட்ட நிர்வாகிகள் வலியுறுத்துகிறார்களாம். பொங்கலுக்கு தமிழகம் வரும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் காதுக்கும் இந்த விஷத்தைக் கொண்டு செல்வதாக இருக்கிறார்களாம் மாநில பாஜக பொறுப்பாளர்கள்.