பெயர் மீண்ட காவிரிப்பூம்பட்டினம்- மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் மகிழ்ச்சி

பெயர் மீண்ட காவிரிப்பூம்பட்டினம்- மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் மகிழ்ச்சி

கரு.முத்து
muthu.k@kamadenu.in

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாகியிருக்கும் மகிழ்ச்சித் தருணத்தில், ஒரு வரலாற்றுப் பெருமையும் மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. ஆம், ஆங்கிலேயர் காலத்திலிருந்து கீழையூர் என்று ஆவணங்களில் பதிவாகியிருந்த ‘காவிரிப்பூம்பட்டினம்’ எனும் பெயரை, உணர்வுபூர்வமான கோரிக்கையின் மூலம் மீட்டெடுத்திருக்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

சங்க காலப் பெயர்

சங்க கால இலக்கியங்களிலும், சங்கம் மருவிய கால இலக்கியங்களிலும் பாடப்பெற்ற நகரம் காவிரிப்பூம்பட்டினம். மேலும், காப்பிய காலத்திலிருந்து புகழ்பெற்ற ஊராகவும் இது விளங்கி வருகிறது. பட்டினப்பாலையும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும் புகார் நகரைப் போற்றிப் பாடியுள்ளன. கண்ணகியும், கோவலனும் பிறந்து வளர்ந்த இந்த ஊர் அந்தக் காலத்திலேயே மிகப் பெரிய துறைமுகம் அமையப்பெற்ற வர்த்தக நகராக இருந்திருக்கிறது. முற்காலச் சோழர்கள் இந்நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்திருக்கிறார்கள். கரிகாலச்சோழன் இங்கிருந்துதான் உறையூர் சென்றதாகச் சொல்கிறது வரலாறு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in