துணை முதல்வர் பதவியை தூக்கி எறியுங்கள்! - ஆர்ப்பரிக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

துணை முதல்வர் பதவியை தூக்கி எறியுங்கள்! - ஆர்ப்பரிக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in

மக்களவைத் தேர்தலில் தனியொருவனாக வெற்றிபெற்ற ரவீந்திரநாத்குமார் மத்திய அமைச்சராகும் வாய்ப்பை அதிமுக தலைகளே தந்திரமாக தடுத்துவிட்டனர். இதனால் கடும் ஆதங்கத்தில் இருக்கும் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள், “இனியும் பொறுமைகாக்க வேண்டாம்... துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுங்கள்; கட்சியை உங்கள் கட்டுக்குள் கொண்டுவாருங்கள்” என ஓபிஎஸ்ஸை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மன்னார்குடி மக்களுக்கு எதிராக அம்மா சமாதியில் தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ், அதிமுகவை இரண்டாக உடைத்தார். சிலபல சர்ச்சைகளுக்குப் பிறகு, “மோடி சொன்னதால் அணிகள் இணைப்புக்கு சம்மதித்தேன்” என்று சொல்லி மீண்டும் அதிமுகவுக்குள் ஐக்கியமான அவருக்கு அந்த நேரத்தில் கேட்டதெல்லாம் கிடைத்தது. துணை முதல்வராகவும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் ஆனார். அவரை நம்பி வந்த மாஃபா பாண்டியராஜன் அமைச்சரானார். கே.பி.முனுசாமி கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் ஆனார்.

ஆனால், சலசலப்புகள் ஓய்ந்த பிறகு... ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர்களும் திட்டமிட்டு புறக்கணிப்பட்டார்கள். ஓபிஎஸ் பேருக்குத்தான் துணை முதல்வர். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் அவரால் தன்னிச்சையாக எந்தக் காரியத்தையும் எளிதில் சாதிக்க முடியாது. சரி, கட்சியாவது அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ்ஸால் கட்சிக்குள்ளும் அதிகாரம் செலுத்த முடியவில்லை. தன்னை நம்பி வந்த விசுவாசிகளுக்கு நியாயமாக பெற்றுத்தர வேண்டிய வாய்ப்புகளைக்கூட அவரால் பெற்றுத்தர முடியவில்லை.

இதனால் ஓபிஎஸ்ஸின் ஆதரவு வட்டம் மெல்ல மெல்லச் சுருங்கிப் போனது. அவரை நம்பி வந்த பலரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்ந்தார்கள். கட்சியிலும் ஆட்சியிலும் தான் நினைத்தது எதுவும் நடக்கவில்லை என்றாலும் ஓபிஎஸ் இதுவரை எந்த இடத்திலும் உணர்ச்சிவசப்படவில்லை. தன்னிடம் வந்து உணர்ச்சிப் பிழம்பாய் கொதிப்பவர்களையும், “பிரிந்து கிடப்பவர்களை எல்லாம் கட்சிக்குள் கொண்டுவந்து ஒட்டவேண்டிய ஒருங்கிணைப்பாளர்தான் நான். ‘எத்தனையோ அவமானங்களைக் கடந்து தான் நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். நீங்களும் என்னைக்காட்டிலும் அவமானங்களைச் சந்திக்க வேண்டி இருக்கும். அதையெல்லாம் தாங்கிக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கும் வரவேண்டும்’னு அம்மா எனக்குச் சொல்லிருக்காங்க. இப்ப வரைக்கும் அம்மா சொன்ன வழியிலதான் நான் போயிட்டு இருக்கேன்; நீங்களும் பொறுமையா இருங்க. நமக்குள்ள அடிச்சுக்கிட்டு கட்சிக்கு கேடு வந்துடக்கூடாது” என்று சமாதானப்படுத்தினார் ஓபிஎஸ்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in