Published On : 08 Jun 2019

கன்னியாகுமரி: மாணவியின் சிகிச்சைக்கு உதவிய சக மாணவர்கள்

அரசு பஸ் மோதிய விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவியின் மருத்துவச் சிகிச்சைக்கு, அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் நிதி உதவி அளித்தனர்.

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி தங்கம். மாடம்பிள்ளை தர்மத்தைச் சேர்ந்த இவர் சமீபத்தில் பஸ்ஸுக்காக நின்றபோது அரசு பஸ் மோதி படுகாயமடைந்தார்.

இதைக் கண்டித்தும், மாணவிக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரியும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியின் குடும்பத்தினர் போதிய பணஉதவி இன்றி தவித்து வந்தனர். மாணவியின் மருத்துவ சிகிச்சைக்கு கல்லூரி மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், ஊழியர்கள், மற்றும் நிர்வாகத்திடம் இருந்து நிதி திரட்டப்பட்டது.

இதில் கிடைத்த ரூ. 1 லட்சத்து 9 ஆயிரத்தை, மாணவியின் தந்தை தங்கராஜிடம், கல்லூரி செயலாளர் அருண்குமார், முதல்வர் சோமசுந்தரம், மாணவர் பேரவைத் தலைவர் கணேஷ்கிரி ஆகியோர் வழங்கினர்.

You May Like

More From This Category

More From this Author


More From The Hindu - Tamil