எட்டுத்திக்கும் சூரியன்!

எட்டுத்திக்கும் சூரியன்!

ஸ்டாலின் முதல்வர் கனவு இம்முறை நிறைவேறிவிட்டது. திமுக, அதிமுக இடையிலான வாக்கு வித்தியாசம் பெரிய அளவில் இல்லையென்றாலும், கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து பெற்ற மொத்த வாக்குகளைக் கணக்கிடுகையில் மகத்தான வெற்றியைத்தான் திமுக பெற்றிருக்கிறது எனலாம். பெரும்பாலான மக்கள் இந்த வெற்றியைக் கொண்டாடினார்கள். வெற்றி, தோல்வியை இரு கூட்டணி தரப்பும் அணுகிய விதமும் வரவேற்கத் தக்கதாகவே இருந்தது. இணையத்தில் எங்கும் வாழ்த்து மழை. அதே சமயம், பாஜக, அதிமுக வென்ற இடங்களில் உள்ள மக்களை இணையத்தில் அதிகமாகக் கிண்டல் செய்து பதிவுகள் இடப்பட்டன. முக்கியமாக, கோயமுத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகள் கிண்டல்களுக்கு ஆளாயின. எச் ராஜா, அண்ணாமலை போன்றோரின் தோல்வியை நெட்டிசன்கள் கொண்டாடி தீர்த்தனர். அதோடு, ஒரு இடங்களில் கூட வெற்றிபெறாத நாம் தமிழர் கட்சி, அமமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவையும் இணையத்தில் அதிகம் கிண்டலடிக்கப்பட்டன. குறிப்பாக, சீமான் குறித்து அதிகமான கிண்டல் பதிவுகள் பகிரப்பட்டன. கரோனா காரணமாக தேர்தல் வெற்றி திருவிழாவை கொண்டாட முடியாத மக்கள், இணையத்தில் அதை நன்றாகவே கொண்டாடி தீர்த்தனர்!    


***************

நோட்டாவை விட குறைவாக வாக்கு பெற்ற தேமுதிக.  - செய்தி

எல்லாம் அண்ணியாருக்கு கிடைத்த வெற்றி!- தமிழன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in