குடிசையிலிருந்து கோட்டைக்கு!- ஒரு சாமானியரின் சாதனைப் பயணம்

குடிசையிலிருந்து கோட்டைக்கு!- ஒரு சாமானியரின் சாதனைப் பயணம்

கரு.முத்து
muthu.k@kamadenu.in

ஒரு சராசரி ஏழை வாக்காளனுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும், அதில் வெற்றியும் கிட்டும் என்பதைத் தனது வெற்றியின் மூலம் ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த க.மாரிமுத்து. ஒரு சிறிய குடிசையில் வசிக்கின்ற, முக்கால் ஏக்கர் நிலத்தைத் தவிர வேறு சொத்துகள் எதுவுமில்லாத ஏழைத் தொண்டரான மாரிமுத்துவுக்குத் திருத்துறைப்பூண்டி தொகுதி மக்கள் பேராதரவைத் தந்து வெற்றி மாலை சூட்டியிருக்கிறார்கள்!

20 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ளவரான அதிமுகவின் சுரேஷ்குமாரை 30,058 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மாரிமுத்து பெற்றிருக்கும் வெற்றி பல்வேறு திசைகளிலிருந்தும் பாராட்டுக்களைக் குவித்திருக்கிறது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது வழக்கமாகிவிட்ட இன்றைய சூழலில், வாக்காளர்களே தேர்தல் செலவுக்காக இவருக்குப் பணம் கொடுத்து கோட்டைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

செயல் புயல்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in