பராமரிக்கப்படாத கழிப்பறைகள் பாதிக்கப்படும் மாணவர்கள்

பராமரிக்கப்படாத கழிப்பறைகள் பாதிக்கப்படும் மாணவர்கள்

உமா
uma2015scert@gmail.com

பள்ளிக் கல்வி சந்தித்துவரும் பின்னடைவுகளில் முக்கியமானது கழிப்பறைப் பிரச்சினை. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் என்றில்லை; தனியார் பள்ளிகளிலும் கழிப்பறை சார்ந்த பிரச்சினைகள் ஏராளம். குழந்தைகளின் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய கழிப்பறைகளைப் பராமரிப்பதில் பள்ளிகளின் செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்பதுதான் வேதனை. கழிப்பறைக்கு அருகில் சென்றாலே மூக்கைப் பொத்திக்கொள்ளும் நிலை இந்த 21-ம் நூற்றாண்டிலும் தொடரவே செய்கிறது.

மாணவிகளுக்கு மன உளைச்சல்

ஓர் ஆசிரியை என்னிடம் பகிர்ந்துகொண்ட தகவல் இது. “என் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிகள் சிலர் தொடர்ந்து விடுப்பு எடுத்ததைக் கவனித்தேன். அவர்களிடம் விசாரித்தபோது, ‘பீரியட்ஸ் டைம்ல டாய்லெட்ல தண்ணியில்லாம எப்படிங்க டீச்சர் போறது... அதான் நாலு நாள் லீவு போட வேண்டியிருக்கு’ என்று பதில் வந்தது. அதேபோல், இடைவேளை மணியடிக்கும் நேரத்துக்கு 10 நிமிடம் முன்பாகவே கழிப்பறை செல்ல அனுமதி கேட்கும் வழக்கம் பல மாணவிகளிடம் இருக்கிறது. அவர்களிடம் விசாரித்தபோது, ‘மணி அடிச்சா எல்லாரும் கூட்டமா வந்துடுவாங்க… இடம் கிடைக்காது டீச்சர்’ என்றனர். ஏன் இரண்டு இரண்டு பேராய் அனுமதி கேட்க வருகிறீர்கள் என்று கேட்டபோது, அவர்கள் சொன்ன பதில் இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. பள்ளிக் கழிப்பறைக்குத் தாழ்ப்பாள் இல்லாததால், ஒருவர் உள்ளே இருக்கும்போது மற்றொருவர் வெளியே காவலுக்கு நிற்க வேண்டுமாம். என்ன கொடுமை பாருங்கள்…” என்றார் அந்த ஆசிரியை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in