ரேகை

ரேகை

அண்டனூர் சுரா
rajamanickam29583@gmail.com

கூத்தையா பாவம், எப்படியெல்லாம் உழைத்த மனிதர். தூங்கும் நேரம் தவிர எல்லா நேரமும் எதையாவது செய்துகொண்டே இருப்பவர். கோழிகுடாப்பைத் திறந்துவிட்டால் கோழிகள் குடுகுடுவென ஓடி மண்ணைச் சீய்க்குமே, அந்தக் குணாம்சம் கொண்டவர். சொறி சிரங்கு கையும், அரிவாள் பிடித்த கையும் சும்மா இருக்காது என்பார்கள், கூத்தையா கையையும் அதில் சேர்த்துக்கொள்ளலாம். இன்றைக்கு?

ஒரு வார காலமாக அவரால் ஒரு வேலையும் பார்க்க முடியவில்லை. வெறுமென திண்ணையில் உட்கார்ந்து மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருப்பதே சுமையென இருந்தது. திண்ணையின் உஷ்ணம் மண்டைக்குள் ஏறி சோம்பலைக் கொடுத்தது. சோம்பலை முறித்துக்கொள்ள சொந்தபந்த வீடுகள் என்று சென்று வந்துகொண்டிருந்தார். ஒரு வாரம் கழிந்ததே தெரியவில்லை. இன்னும் பத்து நாட்கள் ஒரு வேலையும் பார்க்காமல், மருதாணி போட்ட கையைப் போல சும்மா வைத்திருக்க வேண்டுமாம். இதைக் கேட்டபோது, தன் கை மீதே அவருக்கு வெறுப்பு வந்தது. ஒரு வேலையும் பார்க்காமல் கையை வெறுமென வைத்திருப்பதா? அதுவும் நானா?

இந்த பூமி சுற்றுவதே கூத்தையாவிடம் வேலை ஏவுவதற்காகத்தான். ஊரே அப்படித்தான் சொல்லும். இரண்டாள் வேலையை ஒற்றையாளாக நின்று பார்க்கிற அளவுக்குத் திடகாத்திரமானவர். இத்தனைக்கும் வயது அறுபதைத் தாண்டிவிட்டது. வெண்மை தரித்த முடிகள். உச்சந்தலையில் கோடைக்காலத் திடலைப் போல வழுக்கை. உறுதியான கை, கால்களில் வெள்ளை முடிகள் வயதை வெளிக்காட்டின.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in