சீறு - திரை விமர்சனம்

சீறு - திரை விமர்சனம்

மாயவரத்தில் இருக்கும் வீரமிக்க இளைஞனுக்கும் சென்னையில் இருக்கும் ரவுடிக்கும் இடையில் ஏற்படும் எதிர்பாரா மோதல் நட்பாக மலர்வதும் அந்த நட்பால் இருவர் வாழ்விலும் நிகழும் மாற்றங்களும்தான் ‘சீறு’.
    
இன்றைய வெகுஜனப் படங்களுக்கு அத்தியாவசியத் தேவையாகிவிட்ட சமூகப் பிரச்சினை ஒன்றைக் கலந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் ரத்னசிவா. ஆக்‌ஷன், அண்ணன் - தங்கை பாசம், நட்பின் மேன்மை, பெண்களுக்கு எதிரான வன்முறை எனப் பல விஷயங்களைச் சேர்த்து பழகிய கதையை காக்டெயிலாகக் கொடுக்க முயன்றிருக்கிறார்.

ஆக்‌ஷன் காட்சிகளில் சுறுசுறுப்பாகச் சுழலும் ஜீவா சென்டிமென்ட் காட்சிகளிலும் குறைவைக்கவில்லை. குறிப்பாக, தங்கையை 
நினைத்து கண்ணீர் சிந்தும் காட்சிகளில் உருகவைக்கிறார். இதுவரை சாக்லேட் ஹீரோவாகப் பார்த்துப் பழகிய வருண், கொடூர
மான கொலைகளைச் செய்யும் ரவுடியாக கச்சிதமாகப் பொருந்துகிறார். தோற்றம். உடல்மொழி, வசன உச்சரிப்பு அனைத்திலும் நன்கு ஸ்கோர் செய்கிறார்.

ஜீவாவின் தங்கையாக வரும் காயத்ரி, கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி நடித்திருக்கிறார். ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் பள்ளி மாணவிகளாக வரும் பெண்கள் அனைவரும் குறையின்றி நடித்திருக்கிறார்கள். ஜீவாவின் காதலியாக வரும் ரியா சுமன் ஒரு பாடலிலும் சில காட்சிகளிலும் தலையைக் காட்டுகிறார்.

வருண் கதாபாத்திரத்தின் அறிமுகத்துக்குப் பிறகு சூடு பிடிக்கும் படம் இடைவேளை வரை விறுவிறுவென்று நகர்கிறது. இரண்டாம் பாதியில் டாப் கியரில் சென்றிருக்க வேண்டிய படம் ஒரே மாதிரியான காட்சிகள், நம்பகத்தன்மையில்லாத திருப்பங்கள் ஆகியவற்றால் தொய்வடைகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in