விருது அரசியல்!

விருது அரசியல்!

உமா
uma2015scert@gmail.com

விருது என்பது எவ்வளவு உற்சாகம் தரக்கூடியது என்பதை நாம் அறிவோம். அங்கீகாரத்தின் இறுதி நிலைதான் விருதுகளாக மாறுகின்றன. சமீப காலமாக விருதும் பாராட்டும் சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் வரவேற்கப்படும் முக்கியப் பேசு பொருளாக மாறியிருக்கிறது. ஆனால், இவை பற்றிய புரிதல் கல்விக்கூடங்களில், ஆசிரியர்கள் மத்தியில் எத்தகைய மாற்றங்களை, விளைவுகளைத் தந்துள்ளது, சிறப்பான செயல்பாட்டாளர்கள் அனைவரும் விருதுகளால் அங்கீகரிக்கப்படுகின்றனரா என்பதெல்லாம் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.

நல்லாசிரியர் விருது

சிறந்த சேவையாற்றும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியப் பயிற்சி நிறுவனப் பேராசிரியர்கள் உள்ளிட்டோருக்கு ஆண்டு தோறும் செப்டம்பர் 5-ம் தேதி நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. மாநில அரசால் வழங்கப்படும் இந்த விருதில் நல்லாசிரியர்கள் சான்றிதழும் பரிசுத் தொகையும் அளித்து கவுரவிக்கப்படுகிறார்கள். இதேபோல் தேசிய அளவிலும் நல்லாசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டு டெல்லியில் குடியரசுத் தலைவரின் கரங்களால் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in