சினிமா பிட்ஸ்

சினிமா பிட்ஸ்

சீன் கேனரி தொடங்கி டேனியல் கிரெய்க் வரை ஆண்களே கோலோச்சிய ஜேம்ஸ் பாண்ட் வரிசை படங்களில் முதன் முறையாக ஒரு பெண், ஜேம்ஸ் பாண்டாக நடித்திருக்கிறார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை நிகழ்த்திய ‘நோ டைம் டு டை’ ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு. இந்தப் படத்தில் நடித்துள்ள  லஷனா லின்ச் என்ற நடிகையே அடுத்தடுத்த படங்களிலும் பாண்டாக வர வாய்ப்பிருக்கிறது என்கிறது ஹாலிவுட் வட்டாரம்.

அவசர உதவிக்கு ஒரு ஆண் நண்பரும் படத்தில் இருப்பாரே?

இப்போதெல்லாம் அதிகம் திரையில் பார்க்க முடியவில்லேயே என்று கேட்டால்,  ``வழக்கமான ரொமான்ட்டிக் ஹீரோயின் ட்ராக்கில் இருந்து விலகிட்டேன் பாஸ்'' என்கிறார் அட்டக்கத்தி புகழ் நந்திதா ஸ்வேதா. ‘ஐபிசி 376’ படத்தில் அவருக்கு இரட்டை வேடம். அதில் ஒன்று போலீஸ் அதிகாரி கதாபாத்திரமாம். அது பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி பேசும் படம் என்றும் சொல்கிறார் ஸ்வேதா.
என்கவுன்ட்டர் உண்டுங்களா மேடம்?

`மிஸ்டர்.லோக்கல்’ படத்துக்குப் பிறகு வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இயக்குநர் எம்.ராஜேஷுக்கு உதவ முன்
வந்துள்ளாராம் சந்தானம். வெறுமனே லொள்ளு சபா நாயகனாக இருந்த தன்னை பெரியதிரைக்கு கொண்டுவந்த, அந்த ஆரம்ப கால உதவியை மறக்காமல், எம்.ராஜேஷ் அடுத்தாக இயக்கவிருக்கும் படத்தை தானே தயாரிக்க முடிவெடுத்திருக்கிறார் சந்தானம்.
நண்பேன்டா...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in