ஷாக் அடிக்கும் சட்டை - பள்ளி மாணவிகளின் பலே கண்டுபிடிப்பு

ஷாக் அடிக்கும் சட்டை - பள்ளி மாணவிகளின் பலே கண்டுபிடிப்பு

ரோகிணி
readers@kamadenu.in

‘‘எத்தனை சட்டங்கள் போட்டாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்துட்டே இருக்கு. மகாராஷ்டிராவுக்கு அடுத்ததா தமிழ்நாட்டுலதான் இந்த மாதிரியான சம்பவங்கள் அதிகம். இதைத் தடுக்க ஏதாவது செய்யணுமேங்கிற லட்சியத்தோட நாங்க உருவாக்கிருக்கிற சட்டைதான் இந்த ‘ஷாக்’ சட்டை” என்கிறார்கள் தருணிகாவும் தட்சிகாவும். ஊத்துக்குளி கொங்கு மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இந்த இளம் மாணவிகளின் இந்தக் கண்டுபிடிப்பு பல பரிசுகளையும் வென்றிருக்கிறது.

சமீபத்தில் கோவை கொடீசியா தொழிற் கண்காட்சி வளாகத்தில் நடந்த தேசிய அளவிலான அறிவியல் தொழில்நுட்பக் கண்காட்சியின் ஓர் அரங்கில், இந்தச் சட்டையைப் பார்வைக்கு வைத்திருந்தார்கள் இருவரும். ஒருவர் இதை அணிந்துகொள்ள இன்னொருவர் இதன் தொழில்நுட்பம் பற்றி விளக்கிக்கொண்டிருந்தார்.

‘‘இது சாதாரணமான சட்டைதான். உல்லன், காட்டன் இப்படி எதுல வேணா வச்சுக்கலாம். இதுக்குள்ளே 6 வோல்ட் மற்றும் 2 வோல்ட் உள்ள பேட்டரி வச்சிருக்கோம். கூடவே பிராசஸிங் போர்டு, ப்ளூ டூத், ஜிஎஸ்எம், ஜிபிஎஸ் கருவிகளும் பொருத்தியிருக்கோம். வயரிங் செட்டப்போட அதுல குட்டி ‘ஸ்டன் கன்’னோட இணைப்பா ‘பேனிக் கீ’ இருக்கு. இந்தச் சட்டையைப் போடறவங்களுக்கு ஷாக் அடிக்காம இருக்க ‘இன்சுலேட்டிங்’ அமைப்பும் வச்சிருக்கோம். தப்பான எண்ணத்தோட யாராவது தொட்டா, இந்தச் சட்டை பட்டனுக்குக் கீழ இருக்கிற  ‘ஸ்டன் கன்’னை லேசா அழுத்தினா போதும். வெளியே ஷாக் அடிக்கும். தொட்டவன் அலறிடுவான்” என்று தருணிகா சொல்ல, இதன் மற்ற சிறப்புகளை தட்சிகா சொல்லத் தொடங்குகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in