சிவப்பு மஞ்சள் பச்சை - திரை விமர்சனம்

சிவப்பு மஞ்சள் பச்சை - திரை விமர்சனம்

மாமன் - மச்சான் இருவருக்கும் நடக்கும் மோதலைத் தடுத்து அவர்களை இணைக்க, அக்காவின் மனம் துடித்தால் அதுவே ‘சிவப்பு மஞ்சள் பச்சை.’

ஜீ.வி.பிரகாஷ் - லிஜோமோல் ஜோஸ் இருவருமே அக்கா - தம்பி. அக்காவுக்குத் தெரியாமல் பைக் ரேஸ் ஓட்டும்போது டிராஃபிக் எஸ்.ஐ சித்தார்த்திடம் மாட்டிக் கொள்கிறார் ஜீ.வி.பிரகாஷ். அவருக்குப் பாடம் புகட்டச் செய்யும் காரியம் இருவருக்கும் மோதலை உண்டாக்குகிறது. இதனால் சித்தார்த்தை தன் எதிரியாக பாவிக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். இதனிடையே லிஜோமோல் ஜோஸ் - சித்தார்த் இருவருக்கும் திருமணமாகிறது. இதனால் அக்கா - தம்பி, மாமன் - மச்சான் எனப் பிரச்சினை வெடிக்கிறது. இறுதியில் யார் வென்றார்கள் என்பதே திரைக்கதை.

சென்டிமென்ட், ஆக்‌ஷன், க்ரைம் என்று சகல தளங்களிலும் ஒருகை பார்த்த இயக்குநர் சசி, முழுநீள குடும்பப் படமாக  ‘சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் திரைக்கதையை வடிவமைத்து அப்ளாஸ் அள்ளுகிறார்.

சித்தார்த்தும், ஜீ.வி.பிரகாஷும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். முரட்டு மனிதர், நேர்மையான போலீஸ் அதிகாரி, கண்ணியம் தவறாத காதலன், அன்பான கணவன், பொறுப்பான மகன் என்று சித்தார்த் தன் கதாபாத்திரம் உணர்ந்து நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளார். அக்காவுக்கு அன்பான தம்பி, மாமா சித்தார்த்தை வெறுப்பேற்றுவது என அனைத்து விதமான எமோஷனையும் வெளிப்படுத்தி கச்சிதமாக நடிப்பைக் கொடுத்திருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in