பட்டுப் புழுவும் பாசத்தாயும்

பட்டுப் புழுவும் பாசத்தாயும்

ஜெ.சரவணன்
saravanan.j@kamadenu.in

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், குறைகள் சொல்லாமல், திகட்டத் திகட்ட அன்பை பொழிந்துகொண்டே இருக்கக்கூடிய ஒரு உறவு என்றால் அது ‘தாய்’ மட்டும்தான். மெழுகுவர்த்தி தன்னுடைய கடைசித் துளி மெழுகும் உருகித் தீரும் வரை எப்படி தன்னை எரித்துக்கொண்டு ஒளிகொடுக்கிறதோ அப்படிப்பட்ட தாயின் அன்பை சீனாவைச் சேர்ந்த ஓவியர் லுவோ ஷோங்லி தன்னுடைய  ‘Spring Silkworms’ ஓவியத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார்.

வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் பட்டுப்புழு வளர்ப்பில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். அவருடைய முகம் தெளிவாகத் தெரிய
வில்லை. தலைமுடி ஒளி வீசும் பட்டு நூல் போலவே இருக்கிறது. ஓவியத்தின் பிரதானமாக பட்டுப்புழுக்களும், பெண்மணியின் தலைமுடியும்தான் இருக்கின்றன.

இந்த ஓவியம் குறித்து விவரிக்கும் ஓவியர் லுவோ,  “பட்டுப்புழுக்கள் தங்களுடைய கடைசிப் பட்டு இழையைத் தரும் வரை உயிரை விடுவதில்லை. அதுபோல தாய் தன்னுடைய கடைசி மூச்சுவரை தன் மக்களுக்காக உழைத்துக்கொண்டே இருக்கிறார். ஆனால், தாய் தன்னை எங்கும் முன்னிறுத்திக் கொள்வதே இல்லை” என்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in