கண்டாலே கிறுக்கேற்றும் கண்டாங்கி- செட்டிநாட்டுக் கிரீடத்தில் இன்னுமோர் மாணிக்கம்!

கண்டாலே கிறுக்கேற்றும் கண்டாங்கி- செட்டிநாட்டுக் கிரீடத்தில் இன்னுமோர் மாணிக்கம்!

பிரேமா நாராயணன்
premaa.narayanan@gmail.com

செட்டிநாடு…

ஏராளமான சிறப்புகளுக்குப் பெயர் பெற்ற பகுதி! நீண்ட, தொன்மையான பாரம்பரியம்… கட்டிடக் கலைக்குப் பேர்போன அரண்மனை போன்ற அழகிய, பிரம்மாண்டமான வீடுகள்… மிக விமரிசையாக நடத்தப்படும் திருமணங்கள்… அதில் பரப்பப்படும் சீர்வரிசைகள்… நாவிலும் மனதிலும் தங்கிப்போகும் சுவைமிகுந்த பலகாரங்கள்… செறிவும் கனிவுமான விருந்தோம்பல்… கண்கவர் கவின்மிகுக் கைவினைப் பொருட்கள் என்று செட்டிநாடு பகுதியின் சிறப்புகளைச் சொல்லிக்கொண்டேபோகலாம்.
இந்தப் பட்டியலை எல்லாம் தாண்டி, உடலை உறுத்தாமல் சுகமாகத் தழுவிக்கொள்ளும் கைத்தறிச் சேலைகளுக்கும் செட்டிநாடு புகழ்பெற்றது. காரைக்குடியில் நெய்யப்படும் கண்டாங்கிச் சேலைகளுக்கு அதில் பிரதான இடம்.

கண்ணைக் கவரும் காரைக்குடி கண்டாங்கிச் சேலைகளுக்கு, அண்மையில் கிடைத்திருக்கும் ‘புவிசார் குறியீடு’ என்னும் அங்கீகாரம் செட்டிநாடு பகுதி நெசவாளர்களையும் மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in