Published On : 08 Jul 2018

ஜி.வி.பிரசாத் - இவரைத் தெரியுமா?

$ டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்தின் நிறுவனர் அன்ஜி ரெட்டியின் மருமகன் ஆவார்.

$ இலினாய்ஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் கெமிக்கல் இன்ஜினீயரிங்கும், பர்தே பல்கலை கழகத்தில் நிர்வாகத்துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.

$ படித்த பிறகு இந்தியா வந்த இவர், பெற்றோர் கொடுத்த பணத்தை வைத்துக்கொண்டு பார்மா நிறுவனத்தை ஆரம்பித்தார். ஆனால் இந்த நிறுவனம் தோல்வி அடைந்ததால், டாக்டர் ரெட்டீஸ்க்கு விற்று விட்டார்.

$ அதன் பிறகு குடும்பத் தொழிலான கட்டுமானத்தில் ஈடுபட்டார். ஆனால் அந்த தொழில் பிடிக்காமல் டாக்டர் ரெட்டீஸ் குழுமத்தில் இன்னொரு நிறுவனமான Cheminor Drug நிறுவனத்தைத் தலைமை ஏற்று நடத்தினார். இந்த நிறுவனத்தை பின்னாளில் டாக்டர் ரெட்டீஸ் வாங்கியது.

$ "என் அப்பா ஒவ்வொரு விஷயத்திலும் நுணுக்கமான விவரங்களை எதிர்பார்ப்பார். டாக்டர் ரெட்டி தொலைநோக்கு சிந்தனை உடையவர். இதனால் ஒவ்வொரு விஷயத்திலும் தொலை நோக்கு சிந்தனையுடன், விவரங்களை என்னால் பார்க்க முடியும்" என்பார்.

You May Like

More From This Category

More From this Author


More From The Hindu - Tamil