பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாறுமா காவிரி டெல்டா?

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாறுமா காவிரி டெல்டா?

வாய்க்கால்களில் நிரம்பிவரும் நீரில் கெண்டையும், கெழுத்தியும் எதிர்த்து விளையாடிவர, காலால் மடைதிறந்து, வெள்ளமென நீர்பாய்ந்த வயல்களில் வரப்பு மறைந்து செந்நெல் விளைந்து, எங்கெங்கும் பச்சை ஆடை போர்த்தி முப்போகம் விளைந்த காவிரி டெல்டா, கண்கொண்டு பார்க்கமுடியாத அளவுக்குக் கருகிப்போய் கிடக்கிறது!

 அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் கிராமத்து டீக்கடைகளில் தொழிலாளர்கள் டீக்கும் காபிக்கும் அலை மோதுவார்கள். அவர்களைத் தங்கள் வயலுக்கு வேலைக்கு அழைக்க விவசாயிகளும் அங்கே முகாம் போடுவார்கள். இட்லியும், பதநீரும், ஆப்பமும், பனங்கள்ளும் கழனிக்கே தேடிவரும். பணத்துக்குப் பதிலாக நெல்லை பண்டமாற்றாகத் தருவார்கள் கழனித் தொழிலாளர்கள். ஒருபக்கம் ஏர் ஓடும், இன்னொரு பக்கம் நடுவார்கள், வேறொரு பக்கம் அறுவடை நடக்கும். இப்படி எப்போதும் களைகட்டியிருக்கும் காவிரிப்படுகை களையிழந்து கிடக்கிறது. கர்நாடகத்தால் காவிரி நீர் கானல் நீர் ஆனது ஒருபுறமென்றால்... இன்னொருபுறம் டெல்டா பகுதி முழுக்க எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களும், அனல்மின் நிலையங்களும், இரால் பண்ணைகளும், வீட்டடி மனைகளும் தங்களது ஆக்டோபஸ் கரங்களால் டெல்டாவை ஆக்கிரமித்து வருகின்றன.

போராட வேண்டியிருக்காது!

எஞ்சியிருக்கும் விளைநிலங்களை யாவது காப்பாற்றி டெல்டாவில் நெல் உற்பத்தி தொடர வேண்டுமானால், காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பது மட்டுமே ஒரேவழி என்ற கோரிக்கை இப்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in