காட்டைக் காக்க விதைப் பந்து வீசுறோம்!- வீரப்பன் வனத்தில் ஒரு விவேகப் பயணம்

காட்டைக் காக்க விதைப் பந்து வீசுறோம்!- வீரப்பன் வனத்தில் ஒரு விவேகப் பயணம்

கா.சு.வேலாயுதன்

ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சுற்றியுள்ள வறட்டுப்பள்ளம், தட்டக்கரை, கொங்காடை, தாமரைக்கரை போன்றவை வீரப்பன் உலவிய மலை கிராமங்கள். இங்கெல்லாம் விதைப் பந்துகள் தூவுவதோடு, பழங்குடிகளுக்கும் மாணவர்களுக்கும் மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் மும்முரமாய் இருக்கின்றன சில அமைப்புகள். இதை இணையத்தில் பார்த்துவிட்டு, ‘பழங்குடிகளுக்கே இயற்கைப் பாடமா?’ என்ற ஆச்சரியத்துடன் அங்கு பயணமானேன்.

அந்தியூர் அருகில் உள்ள தவிட்டுப்பாளையத்தின் செளடேஸ்வரியம்மன் மண்டபத்தில் காலை 8.30 மணிக்கே ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தார்கள். வாசலில் ஒரு மினி பஸ், ஒரு டெம்போ தயார் நிலையில் காத்திருந்தன. டெம்போவில் மர நாற்றுகளையும், மூட்டைகளில் மண் உருண்டை விதைப் பந்துகளையும் அடுக்கினார்கள் சில இளைஞர்கள். அந்தியூர் காவல் ஆய்வாளர் ரவி, குழந்தைகள் நல மருத்துவர் ரவீந்திரன், தலைமை மருத்துவர் கவிதா, தேசிய மாணவர் பசுமைப் பாதுகாப்புப் படை ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கீதா போன்றோர் பச்சைக் கொடி அசைத்துப் பயணத்தைத் தொடங்கி வைக்க, “இயற்கையை நேசிப்போம்; இயற்கை நம்மை நேசிக்கட்டும்!” எனும் கோஷங்கள் விண்ணை எட்டுகின்றன.

அந்தியூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், அனைத்து இளைஞர் பொதுநல அமைப்பு ஆகியவை இணைந்து கடந்த 35 ஆண்டுகளாக எடுத்துவரும் முன்னெடுப்பு இது. சமீபகாலமாகப் பள்ளிகளில் உள்ள தேசிய மாணவர் பசுமைப் பாதுகாப்புப் படையுடன் இணைந்து இது நடத்தப்படுகிறது என்ற தகவலை இயற்கை ஆர்வலர் த.கு.பத்மநாபன் பகிர்ந்து கொண்டார். வாகனங்கள் புறப்படவே, நானும் அவர்களுடன் பயணமானேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in