ராட்சசி - திரை விமர்சனம்

ராட்சசி - திரை விமர்சனம்

அரசுப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராகப் பணிபுரிய வருகிறார் கீதா ராணி (ஜோதிகா). பள்ளி அருகே இருக்கும் பெட்டிக் கடையில் சிகரெட் விற்கப்படுவது,  கட்சிக் கூட்டத்துக்கு ஆள் சேர்ப்புக்காக மாணவர்களை அனுப்புவது போன்ற அவலங்களைக் கண்டு வெடிக்கிறார். இதனால் நிறைய எதிரிகளைச் சம்பாதிக்கிறார். எதிரிகள் மனம் மாறினார்களா... ஒரு நல்லாசிரியராக ஜோதிகாவால் சாதிக்க முடிந்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

அரசுப் பள்ளியையும் அதன் மாணவர்களையும் ஆசிரியர்களையும் முக்கியக் களமாகக் கொண்டு  படம் இயக்கியுள்ளார் கௌதம்ராஜ். அவரின் அக்கறைக்கும் ஆர்வத்துக்கும் வாழ்த்துகள்.

தலைமை ஆசிரியருக்கான தோரணையில் கீதாராணி கதாபாத்திரத்தில் ஜோதிகா சரியாகப் பொருந்துகிறார். மாணவிகளுடன் ஃப்ரெண்ட்ஸ் ஆவது, சிகரெட் விற்கும் கடைக்காரரை வழிக்குக் கொண்டு வருவது, உள்ளூர் அரசியல்வாதியின் மகனுக்குள் தீப்பொறியைப் பற்ற வைப்பது, ஆசிரியர் முத்துராமனுக்குள் இருக்கும் பொறுப்பை வெளிக்கொண்டு வருவது  எனத் தலைமைத்துவப் பண்புகளில் பக்குவத்தை வெளிப்படுத்துகிறார்.

பூர்ணிமா பாக்யராஜ் சிறிய கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார்.  சவுண்ட் பார்ட்டியாக அருள்தாஸும், பழிவாங்கத் துடிக்கும் கேரக்டரில் கவிதா பாரதியும், பள்ளித் தாளாளர் கதாபாத்திரத்தில் ஹரீஷ் பெராடியும், ஆட்டோ டிரைவராக  வரும் மூர்த்தியும்,  ஜோதிகாவின் தந்தையாக வரும் நாகி நீடுவும், ‘உங்களை நான் பொண்ணு பார்க்க வரட்டுமா' என்று கொஞ்சல் மொழியில் பேசும் கதிரும் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in