ராகுலின் ராஜினாமா கட்சிக்குள் ஒரு புரட்சியை ஏற்படுத்தும்!- அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் கிறிஸ்டோபர் திலக்

ராகுலின் ராஜினாமா கட்சிக்குள் ஒரு புரட்சியை ஏற்படுத்தும்!- அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் கிறிஸ்டோபர் திலக்

எம்.சோபியா

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளரான எம்.கிறிஸ்டோபர் திலக் ராகுல் காந்தியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர். திருச்சியைச் சேர்ந்த இவர், உபி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கட்சிப் பணி ஆற்றியவர். பாராளுமன்றத் தேர்தலின்போது ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளராகச் செயல்பட்டவர். பி.இ., எம்பிஏ முடித்துவிட்டு மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வையும் மேற்கொண்டிருக்கிறார். இந்தத் தேர்தலில் பாஜகவே வெல்லும் என்பதைக் கள நிலவரங்களின் அடிப்படையில் முன்பே துணிந்து சொன்னவர். ராகுல் ராஜினாமா செய்துள்ள சூழலில், அவருடன் ஒரு பேட்டி.

இன்றைய தலைமுறையினர் மத்தியில் பாஜக அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இல்லையே?

1991-க்குப் பிந்தைய இந்தியா வேறு, அதற்கு முந்தைய இந்தியா வேறு. ராஜீவ் காந்தியின் மரணமும், புதிய பொருளாதாரக் கொள்கையை இந்தியா ஏற்றுக்கொண்டதும் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனை. 1950 முதல் 1990 வரையில் சோசலிஸம், கம்யூனிஸம், அம்பேத்கரிஸம், பெரியாரிஸம் எல்லாம் தீவிர பேசுபொருளாக இருந்தன. ஆனால், 1991-க்குப் பிறகு நாட்டின் சமூகம், பொருளாதாரம், அரசியல் எல்லாமே மாறத் தொடங்கிவிட்டன. தொழில்கள் பெருகினாலும், தொழிற்சங்கங்கள் அமைப்பது உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகளின் அரசியல் பங்களிப்பும் குறையத் தொடங்கியது. இடஒதுக்கீடு மூலம் கல்வி, வேலைவாய்ப்பு பெற்றவர்களின் அடுத்த சந்ததி தலையெடுக்க ஆரம்பித்த பின் சமூகநீதி பற்றிய புரிதலும் குறைந்துவிட்டது. அதுநாள் வரையில் இயக்கம் சார்ந்து, சமூகம் சார்ந்து கூட்டாக சிந்திப்பவர்களாக இருந்தவர்கள் கூட, தனிமனிதர்களின் தேவைகள், கனவுகள் சார்ந்து சிந்திப்பவர்களாக மாறினார்கள். எனவே, அதற்கு முந்தைய 30 ஆண்டுகளில் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய கொள்கைகளில் ஒரு தொய்வு ஏற்பட்டு, நாளடைவில் கொள்கை வெற்றிடம் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் சரிவுக்கும் அதுவே காரணம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in