சீக்கிரம் ரெய்டு வரலாம்- சிறையிலிருந்து சசிகலா அனுப்பிய சீக்ரெட்!

சீக்கிரம் ரெய்டு வரலாம்- சிறையிலிருந்து சசிகலா அனுப்பிய சீக்ரெட்!

குள.சண்முகசுந்தரம்

சட்டமன்றம் கூடியதும் திமுக பிரளயத்தைக் கிளப்பும்; அதைச் சமாளிக்க முடியாமல் அதிமுக அரசு ஆட்டம் காணும் எனத் தகவல்கள் வந்துகொண்டிருந்த நேரத்தில், சிறையில் தன்னைச் சந்தித்த தினகரனிடமும் விவேக் ஜெயராமனிடமும் அதிர்ச்சித் தகவல் ஒன்றைச் சொல்லி அனுப்பியிருக்கிறார் சசிகலா. ஜெயா டிவி உள்பட சசிகலா சம்பந்தப்பட்ட இடங்களில் சீக்கிரமே இன்னொரு அதிரடி ரெய்டு நடக்கலாம் என்பதே அந்த ரெட் அலர்ட்!

செந்தில்பாலாஜி விலகல், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகத்தில் படுதோல்வி, சமீபத்தில் தங்கதமிழ்ச்செல்வன் திமுகவில் ஐக்கியமானது என அமமுகவை அந்தலை சிந்தலையாக்கிய தொடர் சம்பவங்களால் தினகரன் மீது சசிகலா கடும் அதிருப்தியில் இருக்கிறார். ஆனாலும் சிறைக்குள் இருந்துகொண்டு தினகரனுக்கு எதிராக அவரால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

செட் - அப் கடிதங்கள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in