திகில் கொடுத்த சசிகலா... திரிசங்கில் தினகரன்!- அடுத்து என்ன செய்யப் போகிறது பாஜக?

திகில் கொடுத்த சசிகலா... திரிசங்கில் தினகரன்!- அடுத்து என்ன செய்யப் போகிறது பாஜக?

குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in

“அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கப் போகிறேன்” -சசிகலாவின் இந்த அதிரடி அறிவிப்பு, தமிழக தேர்தல் களத்தில் வெப்பச் சலனத்தை வெகுவாகப் பரப்பி வருகிறது.

அமமுகவையும் அதிமுகவுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதில் அண்மைக்காலமாக அதிகம் பிரயாசைப்பட்டது பாஜக தான். கள நிலவரம் தெரிந்து இதற்கான முயற்சிகளை பாஜக முன்னெடுத்தாலும், சசிகலாவை தள்ளிவைத்துவிட்டு தினகரனை மட்டும் அதிமுகவுக்குள் கொண்டுவரலாம் எனவே நினைத்தது. எடப்பாடியார் தரப்பில் இதற்கு ஆட்சேபனைகள் கிளம்பியதால், அடுத்த கட்டமாக, அதிமுக கூட்டணிக்குள் அமமுகவை கொண்டுவர மெனக்கிட்டது பாஜக. இதற்கும் எடப்பாடி தரப்பு ஒத்துவரவில்லை. அதற்காக பாஜகவும் விட்டுவிடவில்லை.

ஒத்துவராத எடப்பாடியார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in